ஆரியோட என்ன பிரச்சனை.. பாலா, ரியோ, ரம்யாவுக்கு கமல் விரித்த வலை.. சம்பவம் லோடிங் போல!
சென்னை: பாலாஜி முருகதாஸ் ஆரி பிரச்சனை தான் நேற்று முதல் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் டாப்பிக்காக மாறியுள்ளது.
ஏகப்பட்ட பிரபலங்களும், ரசிகர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சி மீதும், பாலாஜி முருகதாஸ் மீதும் ஏகப்பட்ட விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆரியோட என்ன பிரச்சனை? என கமல் கேள்வி கேட்டு வலை விரிக்க அதில் ரியோ, ரம்யா மற்றும் பாலா வந்து விழுவது போலத்தான் மூன்றாவது புரமோ தெரிகிறது.

ஷிவானி அம்மா கிட்ட
இன்றைய முதல் புரமோவில் மீண்டும் ஆரிக்கும் பாலாவுக்கும் நடக்கும் சண்டை வெடித்துள்ளது. வெள்ளிக்கிழமை பாலா இந்த வாரம் பழைய பயில்வானாக மாறி உள்ளார். தலையணையை தூக்கி அடித்து கோபத்தை வெளிக்காட்டி இருந்தார். ஷிவானி அம்மா கிட்ட பேச வேண்டியது தான என ஆரி பாலாவை பார்த்து கேட்க பாலா கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.

கமல் சாட்டை
முதல் புரமோவில் எங்கடா கமல் சாரை ஆளே காணோம் என நினைத்த ரசிகர்களுக்கு இரண்டாவது புரமோவில் கமல் சார் என்ட்ரி கொடுத்து இந்த வாரம் நடந்த பிக் பாஸ் வீட்டு பிரச்சனைகளுக்கு எதிராக சாட்டையை சுழற்றுவார், தட்டிக் கேட்பார் என்றே தெரிகிறதே பார்க்கலாம்.

ஆரியோட என்ன பிரச்சனை
தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது புரமோவில், ஆரியோட என்ன பிரச்சனை என கமல் கேள்வி கேட்க, நிறைய இடத்துல நிறைய பேர் அவங்களோட 100 பர்சென்ட் எஃபோர்ட் போட்டு இருப்பாங்க அதையெல்லாம் அப்ரீசியேட் பண்றது இல்லை. அதில இருந்து ஏதோ ஒண்ண தேடி கண்டுபிடிச்சி அந்த குறைய மட்டும் சொல்றது என ரியோ முதல் ஆளாக வலையில் விழுவது புரமோவில் தெரிகிறது.

கேள்வி கேட்டா பதில் இல்லை
ரியோவை அடுத்து பேசிய பாலா, விவாதம் பண்ணலாம்னு கூப்பிடுறாரு, கேள்வி கேட்டா, டைரக்ட் பதில் வர மாட்டேங்குது.. நீ நாலாவது வாரம் என்ன பண்ண? அஞ்சாவது வாரம் என்ன பண்ணன்னு தான் கேட்கிறாரு என பாலாவும் தனது பேகேஜை இறக்கி வைத்தார்.

ஆழ்மனசுல அவ்ளோ பேகேஜ்
கடைசியாக கமல் கேள்வி கேட்ட வலையில் விழுந்த ரம்யா பாண்டியன், கமல் சாரை கோர்த்து விட்டு, நீங்க பல வாரமா பேகேஜ் பத்தி பேசுறீங்க, பேகேஜை இறக்கி வைங்க என சொல்லி இருக்கீங்க, ஆனால், அவர் எடுத்து வரதெல்லாம் பார்த்தீங்கனா ஆழ்மனசுல அவ்ளோ பேகேஜை வச்சிக்கிட்டுத் தான் இருக்காரு என ரம்யாவும் ஆரிக்கு எதிராக பேசியுள்ள புரமோ தெறிக்கிறது.

தியானத்தில் ஆரி
சீசன் துவக்கத்தில் ஷிவானியை கார்னர் பண்ண ஹவுஸ்மேட்ஸ், ஆரிக்கு ரசிகர்கள் பலம் அதிகரிப்பது தெரிந்ததும் தொடர்ந்து பல வாரங்களாக அவரை டார்கெட் செய்து வருகின்றனர். ரியோ இதுவரை 8 முறைக்கு மேல் ஆரியை எவிக்ஷனுக்கு நாமினேட் செய்துள்ளார். இந்த வாரம் குடும்பத்தினர் ஆரியை புகழ்ந்து தள்ளியதால், கடுப்பான ஹவுஸ்மேட்கள் அவரை வெளியேற்ற திட்டமிட்டுள்ளனர். ஆனால், ஒவ்வொரு முறை மற்றவர்கள் தன்னை பற்றி கமலிடம் பேசும் போது, அமைதியாக தியானத்தில் இருப்பது போல இருக்கிறார்.

தட்டிக்கேட்பாரா கமல்
ரியோ, ரம்யா மற்றும் பாலாஜி பேசிய குறும்படத்தை போட்டுக் காட்டி யார் யார் மீது பேகேஜ் வைத்துள்ளார் என்பதை சொல்லி தட்டிக் கேட்பாரா கமல். ரசிகர்கள், போட்டியாளர்களின் குடும்பங்களுக்கு சரியாக தெரியும் ஆரியை உங்களுக்கு மட்டும் ஏன் தப்பா தெரியுது? இது என்ன ஸ்ட்ராட்டர்ஜி என கேட்பாரா இல்லை இந்த வாரமும் தடவிக் கொடுப்பாரா

ரெட் கார்டு இருக்காது
பாலாஜி முருகதாஸ் கத்தி பேசியதை கமல் கண்டித்து மட்டும் விடுவார் என்றும், அவருக்கு அதிரடியாக ரெட் கார்டு கொடுத்து கமல் அனுப்ப மாட்டார். இந்த வாரம் ஆஜீத் மட்டும் தான் எவிக்ஷன் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. நிச்சயம் இந்த வாரம் எபிசோடு ரசிகர்களுக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும் என்றே தெரிகிறது, பார்க்கலாம்!


Click it and Unblock the Notifications











