ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்... பிக் பாஸ் அல்டிமேட்டில் வேற லெவல் வரவேற்பு

சென்னை : பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஏறக்குறைய 30 நாட்களை தொட்டுள்ளது.

Recommended Video

Bigg Boss வீட்டு கதவை உடைக்க முயற்சித்த Vanitha Vijaykumar | Bigg Boss Ultimate Vanitha Walks Out

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 5 ஆண்டுகளாக தொகுப்பாளராக இருந்த கமல் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிய நிலையில் நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளார்.

இதையடுத்து தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கவுள்ளார்

பிக் பாஸ் நிகழ்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சி

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. நிகழ்ச்சியின் 5 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இரவு நேரங்களில் ரசிகர்கள் கட்டுண்டு இருப்பது நடைபெற்றது.

சிறப்பாக தொகுத்த உலகநாயகன்

சிறப்பாக தொகுத்த உலகநாயகன்

இந்த நிகழ்ச்சியை கடந்த 5 ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வந்தார் உலகநாயகன் கமல்ஹாசன். சிறப்பான வகையில் நிகழ்ச்சியையும் போட்டியாளர்களையும் வழிநடத்தினார். தொடர்ந்து தற்போது நடைபெற்றுவரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வந்தார்.

விலகிய கமல்ஹாசன்

விலகிய கமல்ஹாசன்

இதனிடையே இந்த நிகழ்ச்சிக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்று கூறி கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர். இதுமட்டுமின்றி போட்டியாளர்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர். நடிகை வனிதாவும் நிகழ்ச்சியில் இருந்து விலகினார். தன்னுடைய மனநலம், உடல்நலனை காரணம் கூறி அவர் விலகினார்.

ஏமாற்றத்தில் ரசிகர்கள்

ஏமாற்றத்தில் ரசிகர்கள்

கமல் நிகழ்ச்சியில் இருந்து விலகியது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்தாலும் அடுத்ததாக நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே இருந்தது. இந்நிலையில் தற்போது நடிகர் சிம்பு பிக் பாஸ் அல்டிமேட்டை தொகுத்து வழங்கவுள்ளதாக விஜய் டிவி அறிவித்துள்ளது.

 புதிய புரமோ வெளியீடு

புதிய புரமோ வெளியீடு

இதுகுறித்த அடுத்தடுத்த புரமோக்களை வெளியிட்டு வருகிறது. இன்று மாலை முதல் நடிகர் சிம்பு இந்த நிகழ்ச்சியில் இணையவுள்ளார். முன்னதாக அவர் போட்டியாளர்களை சந்திக்கும் புரமோவும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய புரமோவும் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.

சிம்புவிற்கு சூப்பர் வரவேற்பு

சிம்புவிற்கு சூப்பர் வரவேற்பு

இதில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் வாத்தியங்கள் முழங்க சிம்புவிற்கு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. பின்னணியில் வழங்கப்பட்டுள்ள பாடலும் அள்ளுகிறது. மொத்தத்தில் சிம்பு இணையவுள்ள பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அவருக்கு ஆரம்பமே அமர்க்களமாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X