Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உங்க மேல வைக்கிற அன்பு ஏன் ஃபேக்கா இருக்கக்கூடாது? பாலாவை குறி வைத்து ஆஜித்தை வறுத்தெடுக்கும் ரியோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த முன்று நாட்களாக கால் செண்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதில் 7 போட்டியாளர்கள் வாடிக்கையாளர்களாகவும் 7 போட்டியாளர்கள் கால் செண்டர் ஊழியர்களாகவும்.
கால் செண்டர்
அதன்படி முதல் ரவுண்டில் பாலாஜி, ஷிவானி, ஆஜித், அனிதா, ஜித்தன் ரமேஷ், கேபி ஆகியோர் கால் செண்டர் ஊழியர்களாக உள்ளனர். ரியோ, ஆரி, அர்ச்சனா, நிஷா, ரம்யா, சனம், சோம் ஆகிய மற்ற ஹவுஸ் மேட்ஸ் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
புதிய புதிய பிரச்சனைகள்
இதில் வாடிக்கையாளர்களாக உள்ள ஹவுஸ்மேட்ஸ் பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து கால் செண்டர் உழியர்களிடம் பேசுகின்றனர். இந்த டாஸ்க்கால் பிக்பாஸ் வீட்டில் பிரச்சனைகள் புதிது புதிதாய் உருவாகிறதே தவிர, தீர்வு வரவில்லை.
ரியோ டூ ஆஜித்
இதனால் பிக்பாஸ் வீடே ரணகளமாய் உள்ளது. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் வாடிக்கையாளரான ரியோ ஆஜித்திடம் போனில் பேசுகிறார்.
யார் சொன்னது?
அப்போது இந்த வீட்டில் எல்லாமே கேம் எல்லாமே ஸ்ட்ரேட்டர்ஜி என்று யார் சொன்னது என கேட்கிறார். அதற்கு பாலா சொல்லியிருப்பார் என்கிறார் ஆஜித். அனிதா, சனம் நாங்க ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸுன்னு சொல்லும் போது அதில் ஒரு அன்பு அழகாய் தெரிகிறது என்று ஆஜித்திடம் கூறுகிறார்.
ஏன் ஃபேக்கா இருக்கக்கூடாது?
அப்போது லிவிங் ஏரியாவில் உள்ள டிவியில் இதை பார்க்கும் ரம்யா, பாலாவிடம் கேட்க வேண்டியதை எல்லாம் ஆஜித்திடம் கேட்கிறார் என ரியோ குறித்து கருத்து கூறுகிறார். தொடர்ந்து ஆஜித்திடம் பேசும் ரியோ, உங்க மேல வைக்கிற அன்பு ஏன் ஃபேக்கா இருக்கக்கூடாது?
எதிர்பார்க்குறது தப்பா?
இதை நான் என் ஒப்பினியனாக வைச்சா எப்படி இருக்கும்? எதிர்பார்க்காம கிடைக்குது அக்ஸெப்ட் பண்ணிக்கிறீங்க? சில பேர் எதிர்பார்த்து கிடைக்கும் போது அதை அக்செப்ட் பண்றது என்ன தப்பு சார்? இந்த வீட்ல அன்ப எதிர்பார்க்குறது தப்பா என்று கேட்கிறார் ரியோ.
பாலாவின் சைகை
அப்போது ஆஜித்துக்கு எதிரே அமர்ந்திருக்கும் பாலாஜி ஷூட் செய்வதுபோல் கையால் சைகை காட்டுகிறார். இப்படியாக உள்ளது இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ. இதனை பார்த்த ரசிகர்கள் இன்றும் கச்சேரி உள்ளது என கூறி வருகின்றனர்.