Yuvan Shankar Raja - அனிருத் வழியை ஃபாலோ செய்யும் யுவன் ஷங்கர் ராஜா?.. என்ன இப்படி இறங்கிட்டாரு
சென்னை: Yuvan Shankar Raja (யுவன் ஷங்கர் ராஜா) இறைவன் படம் குறித்த ப்ரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனிருத் வழியை யுவன் ஃபாலோ செய்கிறாரோ என கேள்வி எழுப்பிவருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. இளையராஜாவின் இளைய மகனான இவரது இசைக்கென்று பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். யுவனின் இசையுடைய பலமே மிகவும் எளிமையாக அனைவரிடமும் கனெக்ட் ஆவதுதான் என அவரது ரசிகர்கள் எப்போதும் கூறுவதுண்டு.

அரவிந்தன்: யுவன் ஷங்கர் ராஜா திரையுலகில் அரவிந்தன் படம் மூலம் அறிமுகமானார். இதில் சரத்குமார் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் 1997ஆம் ஆண்டு வெளியானது. அரவிந்தன் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும்போது அவருக்கு வயது 15லிருந்து 17க்குள்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்தில் அவரது இசை பெரிதாக ஒன்றும் கவனிக்கப்படவில்லை.
கவனம் ஈர்த்த யுவன் ஷங்கர் ராஜா: முதல் படத்தில் அப்படி இப்படி கவனிக்கப்படாமல் போன யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்த படம் பூவெல்லாம் கேட்டுப்பார். இயக்குநர் வசந்த்தின் படங்களில் எப்போதும் பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். அதற்கு தகுந்ததுபோல் இசையமைத்தார் யுவன் ஷங்கர் ராஜா. இன்றுவரை பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் பாடல்கள் அனைத்தும் எவர் க்ரீனாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
உச்சம் தொட்ட யுவன்: பூவெல்லாம் கேட்டுப்பார் படத்துக்கு பிறகு யுவனின் மெட்டுக்கள் எல்லாமும் ஹிட்டாகின. இளையராஜா, ரஹ்மான், வித்யாசாகர், தேவா, கார்த்திக் ராஜா பலரும் தங்களது பெஸ்ட்டை கொடுத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் உள்ளே வந்து தனது எளிமையான இசை மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டார் யுவன். குறிப்பாக செல்வராகவனுடன் அவர் இணைந்து 2000களின் தொடக்கத்தில் யுவன் கொடுத்தது எல்லாமே ஹிட். அதேபோல் ராம், விஷ்ணுவர்தன், வெங்கட் பிரபு, அமீர் என பல இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்து யுவன் ஷங்கர் ராஜா உச்சம் தொட்டார்.
பிறந்தநாள்: யுவன் ஷங்கர் ராஜாவின் இசையமைப்பில் கடைசியாக லவ் டுடே படம் வெளியானது. அந்தப் படத்தின் பாடல்கள் ஹிட் ஆனதன் மூலம் 2கே கிட்ஸ்கள் மத்தியிலும் ரீச் ஆகியிருக்கிறார் யுவன். இந்தச் சூழலில் அவர் இன்று தனது 44ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

இறைவன்: யுவனின் இசையில் அடுத்ததாக இறைவன் படம் ரிலீஸாகவிருக்கிறது. ஜெயம் ரவி, நயன்தாரா உள்ளிட்டோர் நடிக்கும் அந்தப் படத்தை அகமது இயக்குகிறார். இந்நிலையில் யுவனின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய ப்ரோமோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ப்ரோமோவின ஆரம்பத்தில் அகமது கையில் சுத்தியலோடு வந்து படுத்திருக்கும் யுவன் ஷங்கர் ராஜாவை அடிப்பது போல் இருக்கிறது.
பிறகு அகமதுவிடம் யுவன் ஷங்கர் ராஜா தூங்கலாம்னு போனா சுத்தியல எடுத்துட்டு நீ அடிக்க வர மாதிரி கனவு வருது என சொல்கிறார். அதற்கு அகமதுவோ கம்போசிங்கிற்கு லேட் ஆகிறது என சொல்லி மீண்டும் அடிக்கப்போவது போல் அந்த ப்ரோமோ முடிவடைகிறது. இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பாடலுக்கு ப்ரோமோ செய்கிறேன் என்கிற பெயரில் யுவன் ஷங்கர் ராஜாவும் அனிருத் வழியை ஃபாலோ செய்கிறாரோ என கேள்வி எழுப்பிவருகின்றனர். இறைவன் படம் பற்றிய புதிய அப்டேட் நாளை வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











