For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கண்ணுல கொல வெறி, வாய்ல தீப்பொறி நிவின் பாலியின் மரண மாஸ் லுக்..

  |

  கொச்சி: ப்ரேமம் நிவின் பாலியின் புதிய படத்தின் இரண்டாம் லுக் வெளியிடப்பட்டது. அதில் அவர் கண்ணில் கொலைவெறியுடன் போலீசை நேருக்கு நேர் பார்க்கும் பார்வை பார்க்கும் நம்மையும் பயமுறுத்துகிறது.

  நிவின் பாலி தமிழ் மக்களுக்கு நேரம்,ப்ரேமம்,ரிச்சி போன்ற படங்கள் மூலம் நமக்கு மிகவும் பரிட்சையமானவர். இவர் நடித்த ப்ரேமம் படத்தை மலையாள ரசிகர்களை விட தமிழ் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். இன்னும் சொல்லப்போனால் இவருக்கு பெண் ரசிகைகள் ப்ரேமம் படத்தின் மூலம் இன்னும் பல மடங்கு பெருகியது . கட்டுனா ப்ரேமம் நிவின் பாலி மாதிரி ஒரு பையன தான் கட்டணும்னு பல பெண்கள் ஒற்றை காலில் நின்றார்கள். அதற்கு பின் ஆண்கள் அனைவரும் தாடி வளர்த்து கொண்டு தன்னை தானே நிவின் பாலி என நினைத்துக் கொண்டது சுற்றியது வேறு கதை.

  promotions started for the next movie of nivin pauly

  இவர் சமீபத்தில் நடித்த படம் மூத்தோன் , இவரின் முந்தைய படங்களை விட முற்றிலும் மாறுபட்ட வகையில் இருந்தது. அதற்கு நிறைய விருதுகளும் வழங்கப்பட்டது. குறிப்பாக நிவின் பாலின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. அந்த வெற்றியை தொடர்ந்து இவர் இப்போது நடிக்கும் படம் துறமுகம்.

  அடப்பாவமே.. இதற்காகத்தான் இன்ஸ்டாகிராமில் இருந்து திடீரென விலகினாரா, அந்த பிரபல 'கண்ணடி' நடிகை? அடப்பாவமே.. இதற்காகத்தான் இன்ஸ்டாகிராமில் இருந்து திடீரென விலகினாரா, அந்த பிரபல 'கண்ணடி' நடிகை?

  இதன் முதல் போஸ்டர் லுக் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டு வரவேப்பை பெற்ற நிலையில், இப்போது அதன் இரண்டாம் போஸ்டர் லுக்கை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்தப்படத்தை இயக்குனர் ராஜீவ் ரவி இயக்கியுள்ளார். இவர் இதற்குமுன் அன்னையும் ரசூலும், கம்மாட்டி பாடம் போன்ற வெற்றி படங்களை இயக்கி இருந்தார். இவர் தற்போது இயக்கும் படம் துறமுகம் இதில் நிவின் பாலி ஹீரோவாகவும், ஜோஜு ஜார்ஜ் மற்றும் இந்திரஜித் சுகுமாறன் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

  promotions started for the next movie of nivin pauly

  இந்த படம் துறைமுகத்தையும் அதையே வாழ்வாதாரமாக நம்பி கொண்டிருக்கும் மீனவ குடும்பங்களை பற்றிய படமாகும். இதில் மீனவர்கள் அவர்களுக்கு நடக்கும் அநீதி, உரிமைகளை தட்டிக்கேட்கும் வகையில் இதுவரை பார்க்காத கதைக்களத்தில் இந்த படம் தயாராகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் போஸ்டர் லுக்கை நிவின் தனது சமூக வலைதளத்தில் பகிந்திருந்தார். அதில் கண்ணில் துளி கூட பயமில்லாமல் வாயில் பற்ற வைத்த பீடியுடன் ஒரு காவலரை அவர் முறைக்கும் தோணியில் இருக்கும் காட்சி அவரது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  promotions started for the next movie of nivin pauly
  Bigg Boss Kavin Special B'Day Wishes to Amirtha Aiyer | Lift

  மேலும் அவரின் பதிவின் முடிவில் "ஸ்மோக்கிங் இஸ் இஞ்சூரியஸ் டு ஹெல்த்" என குறிப்பிட்டுள்ளது . அது அவர் அவரின் ரசிகர்கள் மீது கொண்டுள்ள அக்கறையை காட்டுகிறது.
  துறமுகம் இது நிவின் பாலின் வேறுமுகம் என்று ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.

  English summary
  nivin pauly is always very popular for selecting different character roles in his career . nivin pauly is not only an Indian actor also a producer, Known for his work in Malayalam cinema. many new scripts which he has chosen has made huge box office collections. now his next movie thuramugam is getting ready for release and posters & 1st look promotions started.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X