சிவாஜி குடும்பத்தில் சொத்து பிரச்சனை.. சகோதரிகளிடம் சமரசமான பிரபு, ராம்குமார்!
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகள்களான சாந்தி மற்றும் தேன்மொழி இருவரும் சகோதரர்களான பிரபு, ராம்குமார் மீது சொத்து தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இதுதொடர்பான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததை அடுத்து சொத்துப்பிரச்சனையில் சமூக முடிவு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவிற்கு தனக்கு என்று தனி அடையாளத்தை கொடுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவரின் குடும்பம் சென்னை தி நகரில் உள்ள அன்னை இல்ல வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த வீட்டில், சிவாஜியின் குடும்பத்தினர் மட்டுமில்லாமல் அவரின் சகோதரர்கள் தங்கவேலு, சண்முகம் மற்றும் தங்கை பத்மாவதி குடும்பத்தினரும் வாழ்ந்து வருகின்றனர். இதில் சிவாஜியின் மகள்கள் சாந்தி மற்றும் தேன்மொழி திருமணமாகி சென்றுவிட்டதால், இந்த வீட்டிற்கு வந்து செல்வது குறைந்துள்ளது.

ஏமாற்றி விட்டனர்: இந்த நேரத்தில் சாந்தி, தேன்மொழிக்கு தெரியாமல் சில சொத்துக்களை பிரபு, ராம்குமார் இருவரும் விற்றுவிட்டது தெரியவந்ததை அடுத்து, இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், எங்களது தந்தை சுயமாக உழைத்து சம்பாதித்த சுமார் ரூ.270 கோடி மதிப்புள்ள சொத்துகளை தங்களது சகோதரர்கள் ராம்குமார், பிரபு ஆகியோர் முறையாக நிர்வகிக்கவில்லை. வீடுகளின் வாடகை பங்கை எங்களுக்கு கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர்.

சொந்தில் பங்கு: 1,000 பவுன் தங்க நகைகள் மற்றும் 500 கிலோ வெள்ளி பொருட்களை ராம்குமாரும், பிரபுவும் அபகரித்துக்கொண்டனர். அவை அனைத்தும் என் தந்தையான சிவாஜிகணேசன் சுயமாக நடித்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய சொத்துகள் என்பதால், அந்த சொந்தில் எங்களுக்கும் பங்கு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சாந்தி. தேன்மொழி ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு பல முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

பிரச்சனை தீர்ந்தது: தற்போது இந்த சொத்துப்பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதாகவும், பேச்சுவார்த்தையின் முடிவில் சில சொத்துகளை சாந்தி மற்றும் தேன்மொழி என இரு சகோதரிகளுக்கும் தர பிரபு, ராம்குமார் தரப்பு சம்மதிச்சதாகத் தெரியுது. அதன்படி ராயப்பேட்டையில் உள்ள சிவாஜி ஃபிலிம்ஸ் எதிரே இருந்த இடத்தை அக்கா தங்கைகள் இருவருக்கும் சரி பாதியாக பிரித்துக்கொள்ளும்படி முடிவு செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், சிவாஜியின் குடும்பத்துக்குள்ள இனி சொத்துப் பிரச்சனை இருக்காது என்றும், வரும் காலத்திலும் சொத்துப்பிரச்சனை வரக்கூடாது, அனைவரும் ஒற்றுமையாக இக்க வேண்டும் என அனைவரும் கூடி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











