சினிமா மக்கள் தொடர்பாளர்களுக்கு ஐடி கார்டு: அபிராமி ராமநாதன் வழங்கினார்
சென்னை: சினிமா பி. ஆர். ஓ க்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
சினிமா PRO க்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அபிராமி ராமநாதன், தென் இந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியனில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் கதிரேசன் அடையாள அட்டை பெற்ற உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார். இந்த விழாவில், முன்னாள் மக்கள் தொடர்பாளரான, நடிகர் சித்ரா லட்சுமணன் பங்கேற்றார். அவருக்கு யூனியன் சார்பில் கௌரவ உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
யூனியன் தலைவர், விஜய முரளி வரவேற்புரை ஆற்றி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். செயலாளர் பெருதுளசி பழனிவேல் நன்றியுரை ஆற்றினார்.
இந்த நிகழ்வில், பொருளாளா் யுவராஜ், துணை தலைவர்கள் கோவிந்தராஜ், ராமானுஜம், இணைச்செயலாளர்கள் குமரேசன், ஆனந்த் ஆகியோரும் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


Click it and Unblock the Notifications











