பணத்தாசை காட்டி நடிகைகளை விபசாரத்தில் தள்ளும் கும்பல்: அதிர்ச்சியில் திரை உலகம்

By Mayura Akilan

சென்னை: வறுமையில் வாடி வருவதாகவும் நல்ல பல காரியங்களுக்கு உதவுவதற்காக தனக்கு பணம் தேவைப்பட்டது. விபசாžரத்தில் ஈடுபட்டால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி தன்னை விபச்சாரத்தில் தள்ளிவிட்டனர் என்று வாக்குமூலம் அளித்துள்ளார் நடிகை ஸ்வேதா பாசு.

நடிகைகள் விபாசார வழக்கில் சிக்குவது ஒன்றும் புதிய விசயமில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, போஜ்பூரி என பல மொழிகளில் நடிக்கும் நடிகைகளும் இந்த வழக்கில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது.

நடிகை ஐஸ் அன்சாரி

நடிகை ஐஸ் அன்சாரி

கடந்த ஆண்டு இந்தி மற்றும் தென்னிந்திய படங்களில் நடித்த நடிகை ஐஸ் அன்சாரி விபச்சாரத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார்.

போஜ்பூரி நடிகைகள்

போஜ்பூரி நடிகைகள்

கடந்த ஆண்டு மும்பை கோகந்த்வாலாவில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் வீட்டில் விபசாரம் செய்த இந்தி மற்றும் போஜ்பூரி நடிகைகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடிகை கரோலின்

நடிகை கரோலின்

வாடா செல்லம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை கரோலின் கடந்த 2002ஆம் ஆண்டு மராட்டிய மாநிலம், புனே நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்து, விபசாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.

பொறிவைத்த போலீஸ்

பொறிவைத்த போலீஸ்

மும்பைக்கு கரோலின் அடிக்கடி வந்து செல்வதைக் கண்காணித்த போலீசார், வாடிக்கையாளர் போர்வையில், நடிகை கரோலின் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் நடிகையைக் கண்டு பேசியபோது, அவர் விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது உறுதியானது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரது மானேஜரும், திரைப்பட ஸ்டூடியோ ஒன்றின் அதிபருமான எம்.ராஜ்குமாரும் கைது ஆனார்கள்.

படுகுழியில் தள்ளிய குடும்பம்

படுகுழியில் தள்ளிய குடும்பம்

தான் இந்த தொழிலுக்கு வரக் காரணம் தன்னுடைய வளர்ப்புத் தந்தையும், அவரது மகனும்தான் என்று கரோலின் அப்போது சொன்னார். பணத்தாசையால் தன்னை இந்தத்தொழிலில் தள்ளிவிட்டதாக கூறினார். இவர் மட்டுமல்ல பல நடிகைகள் விபசார வழக்கில் சிக்குவதும் வறுமையால் இநத் தொழிலுக்கு வந்துவிட்டதாக கூறுவதும் வாடிக்கையாகி வருகிறது. அதுபோலவே இப்போது விபச்சார வழக்கில் சிக்கியுள்ள நடிகை ஸ்வேதாபாசுவும் கூறியுள்ளார்.

நடிகை ஸ்வேதா பாசு

நடிகை ஸ்வேதா பாசு

நடிகை ஸ்வேதா பாசு, ஹைதராபாத்தில் முதல் முறையாக பிடிபடுவதற்கு முன்பும் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் விபசாரத்தில் ஈடுபடுவதை முக்கிய பிரமுகர்கள் தெரிந்து வைத்துள்ளனர்.

டிவி சேனல் ஆபரேசன்

டிவி சேனல் ஆபரேசன்

இதை அறிந்த தெலுங்கு டி.வி. சேனல் ஒன்று ரகசிய நடவடிக்கையில் இறங்கியபோதுதான் அவர் கையும், களவுமாக போலீஸ் வலையில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பணத்தேவை

பணத்தேவை

கடந்த சில மாதங்களாகவே எனக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. தவிர, வாய்ப்புகளும் குறைந்து கொண்டே வந்தன. இதனால் செலவுக்கு பணமின்றி மிகுந்த நெருக்கடிக்கு ஆளானேன். இந்த நேரத்தில் பணத்தேவைக்காக சில தவறான படங்களை தேர்வு செய்தும் நடிக்க நேர்ந்தது.

தவறான வழியில்

தவறான வழியில்

மேலும், எனது குடும்பத்தை காப்பாற்ற நான் சம்பாதித்து கொடுக்கவேண்டிய நிலையும் எனக்கு இருந்தது. எனவே பணம் சம்பாதிப்பதற்கு இதை விட்டால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால்தான் விபசாரத்தின் மூலம் பணம் சம்பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். என்னால் இதில் இருந்து விடுபடவும் முடியவில்லை என்று ஸ்வேதாபாசு கூறியுள்ளார்.

பெண்கள் மறுவாழ்வு இல்லம்

பெண்கள் மறுவாழ்வு இல்லம்

ஸ்வேதாபாசு கைது செய்யப்பட்ட பின்னர் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பெண்கள் மறுவாழ்வு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். அவருக்கு உணவு, உடை, தேவையான மருத்துவ வசதியும் தர உத்தரவிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X