விஜய்யின் அரசியல் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே 'கத்தி'க்கு எதிர்ப்பு?
சென்னை: அரசியலுக்கு வர வேண்டும் என்ற விஜய்யின் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே அவரின் கத்தி படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கத்தி படத்திற்கு அதன் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் வடிவில் பிரச்சனை வந்துள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமான சுபாஷ்கரன் தயாரித்துள்ள கத்தி படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று சில தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் படம் ரிலீஸாகும் தியேட்டர்களில் சற்று பதட்டமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் இது குறித்து விஜய்க்கு நெருக்கமானவர்கள் கூறுகையில்,

அரசியல்
விஜய்க்கு எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளது. அவரின் அரசியல் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே கத்தி படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

உள்நோக்கம்
அரசியல் உள்நோக்கத்துடனேயே கத்தி படத்தை எதிர்க்கிறார்கள் என்றனர்.

தலைவா
டைம் டூ லீட் என்ற வரியை போட்டதால் விஜய்யின் தலைவா பட்டபாடு அனைவரும் அறிந்ததே.

கத்தி
பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் கத்தி படத்திற்கு திமுக எம்.எல்.ஏ. ஜே. அன்பழகன் ஆதரவு தெரிவித்துள்ளார். தலைவா படம் பிரச்சனையை சந்தித்தபோதும் அவர் தான் ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











