Don't Miss!
- News விஜயகாந்த்தை.. ஏக்கத்துடன் தேடுகிறது சென்னை சாலிகிராமம் ரோடு.. அந்த விபூதி எங்கே? கசியுதே நினைவு
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Finance 290% லாபம் தந்த கட்டுமான நிறுவனம்.. விஜய் கேடியா விற்பனை செய்த பங்குகளை வாங்கலாமா..!!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உச்சக்கட்ட ஆபாசம்.. பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்துங்க.. பிரபல நடிகர் வீட்டின் முன் போராட்டம்!
மும்பை: இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி நடிகர் சல்மான் கான் வீட்டின் முன்பு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியில் பிக்பாஸ் 13வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கலர்ஸ் சேனல் பிக்பாஸ் 13 சீசனை ஒளிபரப்பி வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இதனை பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.
ஆண்களுடன் படுக்கை
இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே சர்ச்சைகளும் தொடர்ந்து வருகின்றன. நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பெண் போட்டியாளர்கள், அறிமுகமே இல்லாத ஆண்களுடன் படுக்கையை ஷேர் செய்து கொள்ள வேண்டும் என டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
சென்சார் இல்லாமல்
இதில் சில போட்டியாளர்கள் எல்லை மீறும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அவை அனைத்தும் தொலைக்காட்சிகளில் எந்த சென்சாரும் இல்லாமல் ஒளிப்பரப்ப படுகிறது. இது இந்திய கலாச்சாரத்திற்கு முற்றிலும் எதிரானது என்றும் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
தொடரும் அத்துமீறல்கள்
மேலும் சமூக வலைதளங்களில், பிக்பாஸ் 13 மற்றும் கலர்ஸ் சேனலை தடை செய்யக்கோரி ஹேஷ் டேக்குகளை உருவாக்கி மகாராஷ்டிரா மக்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால் நிகழ்ச்சியில் அத்துமீறல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
வீட்டின் முன்பு போராட்டம்
இந்த நிலையில் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள சல்மான் கான் வீட்டின் அருகே கர்ணிசேனா அமைப்பை சேர்ந்தவர்களும் பிற அமைப்பில் உள்ளவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.
போலீஸ் பாதுகாப்பு
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடிகர் சல்மான்கான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
98 கோடி சிக்கிடுச்சு.. ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!
-
ரவுடி பேபின்னா சும்மாவா.. அப்பவே அந்தாட்டம் போட்டிருக்காரே சாய் பல்லவி.. காலேஜ் வீடியோவை பாருங்க!
-
தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?