நான் ஒரு கிறுக்கன்: எஸ்.ஏ. சந்திரசேகர்

By Siva

Recommended Video

ரஜினியை திட்டிய எஸ்.ஏ. சந்திரசேகர்-வீடியோ

சென்னை: போராட்டம் வேண்டாம் என்று சொன்னால் அது பைத்தியக்காரத்தனம் என்று எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துள்ளார். புதுமுகம் விக்கி இயக்கியுள்ள இந்த படத்தில் டிராபிக் ராமசாமியாக நடித்துள்ளார் எஸ்.ஏ.சி.

டிராபிக் ராமசாமி இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் பேசிய எஸ்.ஏ.சி. ரஜினிகாந்தை தாக்கி பேசியுள்ளார். எஸ்.ஏ.சி. பேசியதாவது,

படம்

படம்

டிராபிக் ராமசாமியை பார்த்தபோது என் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க நீங்க தான் சரியான ஆள் என்றார். அவர் என்னை பற்றி கேள்விப்பட்டுள்ளார். நான் அவர் வேலை செய்வதை அருகில் இருந்து பார்த்து நடித்துள்ளேன்.

கிறுக்கன்

கிறுக்கன்

நான் 90 சதவீதம் நல்லவன். நேரத்திற்கு வருவது, சம்பளம் தருவது எல்லாம் சரியாக செய்வேன் என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறேன். 10 சதவீதம் நான் ஒரு கிறுக்கன். கிறுக்கன் என்றால் சின்ன விஷயத்திற்கு கூட பெரிதாக கோபப்படுவேன். அந்த கோபத்தில் நான் மனிதநேயத்தை கூட மறந்துவிடுவேன். என்னுடன் 17 படங்கள் வேலை செய்தும் என் கோபத்திற்கு ஆளாகாத ஒரே ஆள் இயக்குனர் ஷங்கர் தான்.

குழந்தை

குழந்தை

போராட்டம் கூடாது என்று சொல்வது தவறு. போராடாமல் எதுவுமே கிடைக்காது. நாம் குழந்தையாக இருக்கும்போதே அழுதால் தான் பால் கிடைக்கிறது. அழுகிறதே ஒரு போராட்டம் தான். அந்த போராட்டம் வேண்டாம் என்று சொன்னால் எப்படி.

சுதந்திரம்

சுதந்திரம்

காந்தியடிகள் போராடவில்லை என்றால் நமக்கு சுதந்திரம் கிடையாது. சுதந்திர நாட்டில் இருக்கிறோமா இல்லையா என்பது வேறு கேள்வி. அதற்கு பதில் சொல்ல முடியாது. மெரினா போராட்டம் தானே நம் கலாச்சாரத்தை மீட்டுக் கொடுத்தது. தூத்துக்குடியில் அத்தனை பேர் உயிர் கொடுத்தது தானே ஒரு ஆலையை மூட வைத்தது. அதனால் போராட்டம் வேண்டாம் என்று சொன்னால் அது பைத்தியக்காரத்தனம். போராடாமல் எதுவுமே கிடையாது. நல்ல விஷயத்திற்கு கண்டிப்பாக போராட வேண்டும். அதை போன்று ஒரு போராட்டமான படம் தான் டிராபிக் ராமசாமி என்றார் எஸ்.ஏ.சி.

தூத்துக்குடி

தூத்துக்குடி

காலா ரிலீஸுக்கு முன்பு தூத்துக்குடிக்கு சென்ற ரஜினிகாந்த் எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தக் கூடாது என்றார். இந்நிலையில் தான் எஸ்.ஏ.சந்திரசேகர் இப்படி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X