நிர்வாண போஸ்டர்: நடிகர் ஆமீர் கானை கண்டித்து கான்பூரில் போராட்டம்
கான்பூர்: நடிகர் ஆமீர் கானின் நிர்வாண போஸ்டரை கண்டித்து கான்பூரில் போராட்டம் நடத்தப்பட்டது.
பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தான் நடித்துள்ள பி.கே. படத்தின் போஸ்டருக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போஸ்டரை வெளியிட்டாலும் வெளியிட்டார்கள் அனைவரும் அதை பற்றி தான் பேசுகிறார்கள்.
அந்த ஒரு போஸ்டரால் ஆமீர் கானுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.

ட்விட்டர்
ட்விட்டரில் ஆமீர் கானை ரசிகர்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். நடிகை சன்னி லியோனுக்கு போட்டியாக ஆமீர் வந்துவிட்டார் என்று அவர்கள் கிண்டலடித்துள்ளனர்.

நல்லா தானே
நடிப்பு, நடிப்பு, நடிப்பு என்று மட்டும் இருந்த ஆமீர் கான் நல்லா தானே இருந்தார். திடீர் என்று ஏன் இப்படி நிர்வாண போஸ் கொடுக்கும் விபரீத முடிவை எடுத்தார் என்று பலர் பேசுகிறார்கள்.

ஆடை
தயவு செய்து ஆடை அணிந்து வாருங்கள் ஆமீர் என்று எழுத்தாளர் ஷோபா டே தெரிவித்துள்ளார். இப்படி ஒரு போஸ்டருக்கு போஸ் கொடுத்து ஆமீர் தனது பெயரைக் கெடுத்துக் கொண்டுள்ளார்.

போராட்டம்
ஆமீர் கானின் நிர்வாண போஸ்டரை கண்டித்து உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆமீருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

அசிங்கம்
ஆமீர் நிர்வாணமாக போஸ் கொடுத்ததன் மூலம் நாகரீகமான இந்திய சமுதாயத்தை அசிங்கப்படுத்திவிட்டார் என்று கான்பூர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

போஸ்டர் எரிப்பு
கண்டன போராட்டம் நடத்தியவர்கள் கோஷமிட்டதுடன் பி.கே. பட போஸ்டரை தீ வைத்து எரித்தனர். முன்னதாக இந்த போஸ்டர் தொடர்பாக ஆமீர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











