twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    12 வருஷ போராட்டம், பெருமையா இருக்கு அப்பா: சரத்குமாருக்கு வரு, ரயன் வாழ்த்து

    By Siva
    |

    Recommended Video

    Actor SarathKumar:12 வருஷ போராட்டத்திற்கு, பலன் கிடைத்துவிட்டது

    சென்னை: அப்பா சரத்குமாரின் 12 வருட முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளதை நினைத்து பெருமைப்படுவதாக மகள்கள் ரயன் மிதுன், வரலட்சுமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    கர்மவீரர் காமராஜருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் ரூ. 25 கோடி செலவில் கட்டப்பட்ட காமராஜர் மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், ராதிகா சரத்குமார், வரலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கணவர்

    12 வருடமாக போராடி காமராஜருக்கு மணிமண்டபம் திறக்க வைத்த கணவர் சரத்குமாரை நினைத்து பெருமைப்படுவதாக ராதிகா ட்வீட் செய்துள்ளார். மேலும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி தலைவர்களுக்கு நன்றி என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    வரலட்சுமி

    உங்களின் கனவுத் திட்டமான காமராஜர் மணிமண்டபம் அவரின் பிறந்தநாள் அன்று முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டதில் பெருமையாக உள்ளது என்று அப்பாவை பற்றி பெருமையாக ட்வீட் போட்டுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

    ரயன் மிதுன்

    அப்பா, உங்களை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது. 12 ஆண்டு போராட்டத்திற்கு இறுதியில் பலன் கிடைத்துவிட்டது. லவ் யூ அப்பா என்று மகள் ரயன் மிதுன் தெரிவித்துள்ளார்.

    நெட்டிசன்ஸ்

    நெட்டிசன்ஸ்

    ரயன் மிதுன் ட்வீட் போட்டால் அவர் ராதிகா மகள், சரத்குமார் மகள் இல்லை என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்கிறார்கள். ஆனால் ரயன் சரத்குமாரை தன் சொந்த அப்பாவாகவே பார்க்கிறார். சரத்தும் ரயனை பிரித்துப் பார்ப்பது இல்லை. மேலும் வரலட்சுமியும் ரயனை சகோதரியாக ஏற்றுக் கொண்டுள்ளார். அவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகவே உள்ளனர்.

    English summary
    Radhika, Rayane Mithun and Varalaxmi are so proud of Sarathkumar as his 12 year struggle has finally paid off.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X