பொன்னியின் செல்வன் பயணத்தில் நான்...பெருமை கொள்ளும் பிரகாஷ் ராஜ்

சென்னை : பிரம்மாண்ட வரலாற்று படமான பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக மணிரத்னம் இயக்கி வருகிறார். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயம்ரவி, லால், ரஹ்மான் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

அல்லிராஜா சுபாஸ்கரன், மணி ரத்னம் இணைந்து லைகா ப்ரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் பேனரில் படத்தை தயாரித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரவிவர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ராயல் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

ராயல் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

சீறும் சிங்கம், வாள், கேடயம் இருப்பது போன்ற பொன்னியின் செல்வன் படத்தின் ராயல் போஸ்டரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். இந்த படத்தின் முதல் பாகத்தை 2022 ல் தான் ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு உறுதி செய்துள்ளது.

பொன்னியின் செல்வன் பயணத்தில் நான்

பொன்னியின் செல்வன் பயணத்தில் நான்

இந்நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் போஸ்டரை தங்களின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இதே போல் பிரகாஷ் ராஜும் போஸ்டரை வெளியிட்டு, பொன்னியின் செல்வன் வரலாற்று பயணத்தில் நானும் இருப்பது பெருமையாக உள்ளது என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

டாப் ஹீரோக்களுடன் பிரகாஷ் ராஜ்

டாப் ஹீரோக்களுடன் பிரகாஷ் ராஜ்

பொன்னியின் செல்வன் படத்துடன் கேஜிஎஃப் சேப்டர் 2, புஷ்பா, அண்ணாத்த, சர்கரு வாரி பாட உள்ளிட்ட பல டாப் ஹீரோக்கள் நடக்கும் படத்தில் நடித்து வருகிறார் பிரகாஷ் ராஜ். பிரகாஷ் ராஜிற்கு தெலுங்கில் அதிக வாய்ப்புக்கள் குவிந்து வருகிறது.

ஒரே நேரத்தில் இரண்டு பாகங்கள்

ஒரே நேரத்தில் இரண்டு பாகங்கள்

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை 2022 ம் ஆண்டின் துவக்கத்தில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து 2022 ம் ஆண்டின் இறுதியிலேயே இரண்டாம் பாகத்தையும் வெளியிட உள்ளனர். இதனால் பொன்னியின் செல்வனின் இரண்டு பாகங்களும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X