twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘அரசன்’ பட விவகாரம்.. ரூ. 85 லட்சத்தை தராவிட்டால் சிம்புவின் கார், மொபைலை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவு

    அரசன் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்புவுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

    |

    சென்னை: அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடித்ததாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் சிம்பு ரூ.85 லட்சத்தை திருப்பி கொடுக்காவிட்டால் அவரது வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்யலாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    பேஸ்சன் மூவி மேக்கர்ஸ் என்ற சினிமா படத் தயாரிப்பு நிறுவனம், நடிகர் சிம்பு மீது சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தது. அதில், நடிகர் சிம்புவை கதாநாயகனாக வைத்து 'அரசன்' படத்தை தயாரிக்க திட்டமிட்டதாகவும், இதற்காக அவருக்கு ரூ. 1 கோடி சம்பளம் பேசி, முன்பணமாக ரூ.50 லட்சத்தை கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந் தேதி வழங்கியதாகவும் கூறியிருந்தனர்.

    மேலும். தங்களுடன் செய்து ஒப்பந்தப்படி நடிகர் சிம்பு 'அரசன்' படத்தில் நடிக்க முன்வராமல் இழுத்தடித்தாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

    கோரிக்கை:

    கோரிக்கை:

    இதனால், தங்கள் படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தங்களது பணத்தை திரும்ப பெற்றுத் தர சட்டப்படி உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    வட்டியுடன் சேர்த்து:

    வட்டியுடன் சேர்த்து:

    இந்த மனு நீதிபதி மெ.கோவிந்தராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்கு பின்பு நடிகர் சிம்பு ‘அரசன்' படத்தில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ் தொகை ரூ.50 லட்சத்தை ரூ.35.50 லட்சம் வட்டியுடன் சேர்த்து ரூ.85.50 லட்சம் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

    ஜப்தி செய்ய உத்தரவு:

    ஜப்தி செய்ய உத்தரவு:

    அதோடு, இந்த தொகையை 4 வாரத்தில் அவர் செலுத்த வேண்டும். இல்லையெனில் நடிகர் சிம்பு வீட்டில் உள்ள வீட்டு உபயோக பொருட்களான ரெப்ரிஜிரேட்டர், டி.வி., வாஷிங்மெஷின், கட்டில், ஷோபா செட், மின் விசிறிகள், கிரைண்டர், மிக்ஸி, ஏர்கண்டி‌ஷனர், டைனிங் டேபிள், சேர்கள் மற்றும் சிம்புவுக்கு சொந்தமான கார், மொபைல் போன்கள் ஆகியவற்றையும் ஜப்தி செய்யலாம் என நீதிபதி தீர்ப்பளித்தார்.

    நீதிபதி மறுப்பு:

    நீதிபதி மறுப்பு:

    முன்னதாக இது தொடர்பான சிம்பு தரப்பு வாதத்தில், "குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பு தொடங்காததால் தனக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், இதனால் அட்வான்ஸ் தொகையை திருப்பித்தர இயலவில்லை என்றும் வாதாடப்பட்டது. அதை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Madras High Court has directed actor R. Silambarasan alias Simbu to provide security for Rs. 85.50 lakh within four weeks or end up facing attachment proceedings with respect to his household articles, including refrigerator, television, washing machine, cots, sofa set, fans, geyser, grinder, mixie, air conditioner and dining table with chairs.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X