twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வன்..எம்ஜிஆர் ஏன் விரும்பினார்?படம் உருவாக்க பின்னணியில் மணிரத்னத்தின் கடின உழைப்பு

    |

    கல்கியின் பொன்னியின் செல்வன் கதை வரலாற்று நிகழ்வை அடிப்படையாக கொண்ட கதை. 4 ஆண்டுகள் 5 பாகமாக தொடராக வந்தது.

    பொன்னியின் செல்வன் மற்ற நாவல்களை விட ஏன் முக்கியமானது எம்ஜிஆர், கமல்ஹாசன் என பலரும் முயன்றது ஏன்? ரஜினிகாந்த் ஏன் போற்ற வேண்டும்.

    பொன்னியின் செல்வனை 70 ஆண்டுகால திரையுலக முயற்சியை மணிரத்னம் சாத்தியமாக்கிய பின்னணி பற்றி பார்ப்போம்.

    பொன்னியின் செல்வனில் இருந்து தேவராளன் ஆட்டம் லிரிக்கல் வீடியோ ரிலீஸ்: Goosebump மொமண்ட் இது பொன்னியின் செல்வனில் இருந்து தேவராளன் ஆட்டம் லிரிக்கல் வீடியோ ரிலீஸ்: Goosebump மொமண்ட் இது

    70 ஆண்டுகால பலரது கனவை நிறைவேற்றிய மணிரத்னம்

    70 ஆண்டுகால பலரது கனவை நிறைவேற்றிய மணிரத்னம்

    வரும் செப் 30 அன்று வெளியாகிறது மணிரத்னம் இயக்கத்தில் தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் படம். இதன் முதல் பாகம் முதலில் வெளியாகிறது. இது கல்கியால் 1950 முதல் 54 ஆம் ஆண்டு வரை எழுதிய பொன்னியின் செல்வன் நாவலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட படம் ஆகும். இந்த நாவல் வரலாற்றை அடிப்படையாக கொண்ட நாவல் என்பதால் மட்டும் தான் போற்றப்படுகிறது. அதில் வரும் பாத்திரங்களால் அது பேசப்படுகிறது. வலுவான திரைக்கதை, படமாக்க முயற்சி 70 ஆண்டுகள் எம்ஜிஆரால் தொடங்கி வைக்கப்பட்டு மணிரத்னத்தால் சாத்யமானதன் பின்னணி என்ன? பார்ப்போம்.

    ரஜினியை ஈர்த்த பழுவேட்டரையர்

    ரஜினியை ஈர்த்த பழுவேட்டரையர்

    படம் முழுவதும் பிரயாணிக்கும் கேரக்டர். வந்திய தேவன் கேரக்டரும் அருண்மொழி வர்மன் கேரக்டரும் பொன்னியின் செல்வன் கதையை படித்தவர்களால் மறக்க முடியாது. அதேபோல் பழுவேட்டரையர் பாத்திரமும் முக்கியமானது. அதனால் தான் ரஜினிகாந்த் எனக்கு பழுவேட்டரையர் பாத்திரமாவது கொடுங்கள் என மணிரத்னத்திடம் கேட்டதாக சொன்னார். பொன்னியின் செல்வன் நாவல் ஒரு திரைக்கதை பாத்திரங்களின் கதம்பம். அந்த மாலையை படமாக கோர்க்க ஒவ்வொருவரும் பட்டப்பாடு.

    எம்ஜிஆர் மனங்கவர்ந்த வந்திய தேவன்

    எம்ஜிஆர் மனங்கவர்ந்த வந்திய தேவன்

    பொன்னியின் செல்வன் கதையை படித்த எம்ஜிஆர் 1950 களின் இறுதியில் கல்கியிடம் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து கதை உரிமையை வாங்கினார். படம் எடுக்க விரும்பி வந்திய தேவனாக தானும் மற்ற கேரக்டர்களில் ஜெமினி கணேசன், பாலைய்யா, நம்பியார், பத்மினி, சரோஜா தேவி, வைஜெயந்திமாலா என பெரிய நட்சத்திர பட்டாளத்தையே இறக்க எண்ணியிருந்தார். ஆனால் எம்ஜிஆர் மேடை நாடகத்தில் நடிக்கும்போது கால் ஒடிந்து பல மாதம் படுக்கையில் இருக்க நேர்ந்தது. இதனால் படம் தள்ளிப்போனது.

    திரைக்கதை அமைக்கும் இமாலய பணி

    திரைக்கதை அமைக்கும் இமாலய பணி

    எம்ஜிஆர் எடுக்க இருந்த பொன்னியின் செல்வனில் எம்ஜிஆர் நடிக்க விரும்பிய பாத்திரம் வந்திய தேவன் பாத்திரம். ஆனால் அது எம்ஜிஆருக்கு கைகூடாமலே போனது. ஆனாலும் பொன்னியின் செல்வனை எடுக்கும் முயற்சியை அவர் கைவிடவில்லை. இயக்குநர், கதாசிரியர் மகேந்திரனிடம் இதற்கான திரைக்கதையை எழுதச் சொன்னார். 4 ஆண்டுகள் 5 பாகங்களாக வெளிவந்த வரலாற்றுப்படம். எந்தப்பாத்திரத்தையும் தள்ள முடியாது என்பதால் மிகப்பெரிய திரைக்கதை ஆசிரியரான மகேந்திரன் திணறித்தான் போனார். கடைசி வரை எம்ஜிஆரின் ஆசையை அவரால் நிறைவேற்ற முடியவில்லை.

    எம்ஜிஆராலேயே முடியாமல் போனால் யாரால் முடியும்

    எம்ஜிஆராலேயே முடியாமல் போனால் யாரால் முடியும்

    பொன்னியின் செல்வன் கதையை திரைக்கதையாக்குவதுதான் முதல் முயற்சி. காரணம் அதற்காக மிகபெரிய அளவில் மெனக்கிட வேண்டும். 4 ஆண்டுகள் எழுதிய பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஒரு வரலாற்று நாவலை 3 மணி நேரம் அல்லது இரண்டு பாகம் என்றால் 6 மணிநேரம் ஓடும் படத்திற்கான திரைக்கதையாக மாற்றுவது மிகப்பெரிய பணி என்பதால் எதையும் முடிக்கும் ஆற்றல் கொண்ட எம்ஜிஆரால் கூட அது நிறைவேறாமலேயே நின்றது. எம்ஜிஆராலேயே முடியவில்லை என்றால் யார் எடுக்க முடியும். பொன்னியின் செல்வன் நகராமலே நின்றது.

    பொன்னியின் செல்வனை 30 ஆண்டுகள் கடந்தும் மறக்காத எம்ஜிஆர்

    பொன்னியின் செல்வனை 30 ஆண்டுகள் கடந்தும் மறக்காத எம்ஜிஆர்

    அதன் பின்னர் 1980 கள் வரை எம்ஜிஆர் இதுப்பற்றி நினைத்துக் கொண்டிருந்ததாகவே தெரிகிறது. சிவகுமாரின் 100 படமான ரோசாப்பூ ரவிக்கைக்காரி வெற்றிவிழாவில் கூட எம்ஜிஆர் பொன்னியின் செல்வன் நாவலை பற்றி பேசி அதை படமாக்கினால் அருண்மொழி வர்மன் கேரக்டருக்கு நான் சிவகுமாரைத்தான் பரிந்துரைப்பேன் என்று கூறியிருந்தார். நினைத்துப்பாருங்கள் அந்த நேரம் எம்ஜிஆர் மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன் என்கிற சரித்திரப்படத்தை எடுத்து கையை சுட்டுக்கொண்ட நேரம் ஆனாலும் அவரது தாகம் தீரவில்லை.

    மாறிப்போன தமிழ் சினிமாவின் பாதை நின்றுபோன முயற்சி

    மாறிப்போன தமிழ் சினிமாவின் பாதை நின்றுபோன முயற்சி

    எம்ஜிஆர் பாரதிராஜாவிடம் கூட இதுபற்றி பேசி பொன்னியின் செல்வனை தயார் செய்ய சொன்னதாக சொல்வார்கள். ஆனாலும் சரித்திர பட காலக்கட்டம் முடிந்து கிராமங்களை நோக்கி தமிழ் சினிமா பயணப்பட்ட நேரம். கலர் படங்களுக்கு மவுசு இருந்த நேரம் கருப்பு வெள்ளைப்படத்தில் ஒரு விஷயத்தை சொல்வதை விட கலர் படத்தில் சொல்வது காஸ்ட்லினாது, படச்செலவு, அன்று எந்த டெக்னாலஜியும் இல்லாத ஃபிலிம் ரோல் வைத்து ஷூட்டிங் நடத்திய நேரம் யாரும் ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை.

    உலக நாயகனின் பெருங்கனவு பொன்னியின் செல்வன்

    உலக நாயகனின் பெருங்கனவு பொன்னியின் செல்வன்

    அதன் பின்னர் இதை கையிலெடுத்தவர் உலக நாயகன் கமல் ஹாசன் ஓரளவு திரையுலகில் கால் பதித்து, சொந்த தயாரிப்பில் விக்ரம் படத்தை 1986 ஆம் ஆண்டு தயாரித்து வெற்றிகண்ட கமல்ஹாசனுக்கும் சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் மீது ஆசை வந்தது. அவர் அதை திரைக்கதையாக்கும் பொறுப்பையும், அதில் தவறு நேராமல் இருக்கவும் பலரிடமும் ஆலோசித்தார், முக்கியமாக இயக்குநர் மணிரத்னத்திடம் ஆலோசனை கேட்டார். படச்செலவு உள்ளிட்டவைகளை திட்டமிட்டு வைத்திருந்தார். ஆனால் இங்கும் திரைக்கதையாக்கம் பணியில் தொய்வு ஏற்பட்டது. பின் அது நின்று போனது.

    மணிரத்னம் மனதில் அணையாவிளக்கு பொன்னியின் செல்வன் பட முயற்சி

    மணிரத்னம் மனதில் அணையாவிளக்கு பொன்னியின் செல்வன் பட முயற்சி

    மணிரத்னம், கமல்ஹாசன் இருவருக்குள்ளும் அந்த ஒளி அணையாமல் எரிந்துக்கொண்டே இருந்தது. பொன்னியின் செல்வனை தயாரிக்க மீண்டும் 1994 ஆம் ஆண்டு இருவரும் முயற்சித்ததாக கூறப்பட்டது. ஆனால் அந்த முயற்சியிம் தோல்வியிலேயே முடிந்தது. மணிரத்னம் மட்டும் இந்த முயற்சியை விடாமல் பின் தொடர்ந்துக்கொண்டே இருந்தார். அப்போது அவருடன் இணைந்தார் எழுத்தார் ஜெயமோகன். மிகப்பெரும் எழுத்தாளரான ஜெயமோகன் மணிரத்னம் இணைப்பு பொன்னியின் செல்வன் திரைக்கதையை அமைக்க சாத்தியமானது. 2000 ஆம் ஆண்டுமுதல் திரைக்கதைகளில் அனுபவமுள்ள ஜெயமோகன் இலக்கியம், வரலாறு, ஆன்மிகம், தத்துவம் என பன்முக திறன் மிக்க எழுத்தாளர்.

    சரியான நேரத்தில் இணைந்த ஜெயமோகன்

    சரியான நேரத்தில் இணைந்த ஜெயமோகன்

    ஜெயமோகன் திரைக்கதையில் மணிரத்னம் இணைந்து 2010 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வனை எடுக்க முடிவு செய்தனர். விஜய் வந்தியதேவன் பாத்திரத்திலும், மகேஷ்பாபு அருள்மொழி வர்மன் பாத்திரத்திலும், சத்யராஜ், விக்ரம், சூர்யா, அனுஷ்கா என முடிவு செய்து போட்டோஷூட் நடத்தப்பட்டு அதுவும் முற்றுப்பெறவில்லை. 2019 ஆம் ஆண்டு இறுதிவடிவம் பெற்ற பொன்னியின் செல்வனில் முதலில் இந்தி நடிகை ரேகா, விஜய் சேதுபதி, சிம்பு, அமிதாப்பச்சன், நயன் தாரா உள்ளிட்டோர் யோசிக்கப்பட்டதாக தகவல் உலாவுகிறது. ஆனால் 2019 ஆம் ஆண்டுக்குப்பின் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனாக மணிரத்னம் களம் இறங்கினார்.

    கொரோனா பேரிடரை மீறிய முயற்சி

    கொரோனா பேரிடரை மீறிய முயற்சி

    ஆனால் கொரோனா பேரிடர் குறுக்கிட்டது. அந்த காலக்கட்டத்தை தங்கள் படத்துக்கான திட்டமிடலாக மாற்றினர். இடையில் நடிகர்களில் சில மாற்றங்கள் வந்தது. பின் ஒப்பந்தமான நடிகர் நடிகைகளை 2 ஆண்டுகளாக கேரக்டர்களாக வாழ மணி ரத்னம் பெருமுயற்சி எடுத்தார். இதை பலரும் பேட்டியில் சொல்லியிருப்பார்கள், இது எந்த அளவுக்கு என்றால் நதினி, குந்தவை ரோலில் நடித்த ஐஸ்வர்யா ராய், குந்தவை நட்புடன் கூட பழக கூடாது என தடை போடும் அளவுக்கு மணிரத்னம் உறுதியாக இருந்தார்.

    சாத்தியமானது இதனால், படம் வென்றால் தமிழ் திரையுலகம் அடுத்த நகர்வை நோக்கி பாயும்

    சாத்தியமானது இதனால், படம் வென்றால் தமிழ் திரையுலகம் அடுத்த நகர்வை நோக்கி பாயும்

    இறுதியாக மணிரத்னம் முயற்சி வெற்றிப்பெற்று படமும் வரும் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது, மணிரத்னம் எனும் மிகப்பெரிய ஆளுமையும், லைக்கா ப்ரடக்‌ஷனின் முன்னெடுப்பும், ஜெயமோகனின் ஒத்துழைப்பும் இதற்கு முக்கிய காரணம் எனலாம். இன்னொரு முக்கியமான விஷயம் டெக்னாலஜியின் வளர்ச்சி. எம்ஜிஆருக்கு கிடைக்காத, கமலுக்கு எட்டாக்கனியாக இருந்த நவீன டெக்னாலஜியின் வரவு அதிலும் இந்திய சினிமாத்துறையில் அடைந்துள்ள வளர்ச்சி இக்காலக்கட்டத்தில் மணிரத்னத்தின் 30 ஆண்டுகால கனவை நனவாக்கியுள்ளது. இது வெற்றிப்பெற்றால் தமிழ் சினிமா அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரும்.

    English summary
    Kalki's Ponniyin Selvan is a story based on a historical event. It was serialized in 5 parts for 4 years. Why Ponni's Selvan is more important than other novels Why MGR, Kamal Haasan tried many others? Why should Rajinikanth be admired? Let's take a look at the background behind which Mani Ratnam made Ponni's successful 70-year film venture possible.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X