Sara Arjun: இதயமும் ஒரு ரகசிய சுரங்கம்.. என்ன சாரா தமிழில் கவிதை எல்லாம் சொல்றாங்க.. என்ன விசேஷம்?
சென்னை: தெய்வத்திருமகள் படத்தில் நிலா பாப்பாவாக நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட சாரா அர்ஜுன் சைவம் படத்தில் மழை மட்டுமா அழகு.. சுடும் வெயில் கூடத்தான் அழகு என்று அழகான பாடலுக்கு அம்சமாக நடித்திருந்தார்.
அதன் பிறகு அந்த பாப்பாவை எங்கே கணவில்லை என தேடிய ரசிகர்களுக்கு பொன்னியின் செல்வன் படத்தில் லேசாகவும் பொன்னியின் செல்வன் 2 படத்தில் வெயிட்டாகவும் ஸ்க்ரீனில் தோன்றி நடிப்பால் மிரட்டி உள்ளார்.
இளம் பெண்ணாக மாறி உள்ள சாரா அர்ஜுன் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் தேவதையாக காட்சியளிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தமிழில் கவிதையையும் கேப்ஷனாக கொடுத்துள்ளார்.

பேபி சாரா: ஸ்ரீதேவி, மீனா, அனிகா சுரேந்திரன் என ஏகப்பட்ட குழந்தை நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பின்னாளில் ஹீரோயினாகவும் கலக்கி உள்ளனர். அந்த வரிசையில் விரைவில் பேபி சாராவும் ஹீரோயின் சாராவாக மிரட்ட காத்திருக்கிறார்.
2011ம் ஆண்டு இந்தியில் வெளியான 404 படத்தின் மூலம் அறிமுகமான பேபி சாரா அதே ஆண்டு தமிழில் சியான் விக்ரம், அனுஷ்கா, அமலா பால் நடிப்பில் வெளியான தெய்வத் திருமகள் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து சைவம், விழித்திரு, சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்த பேபி சாரா குமரி சாராவாக மாறி பொன்னியின் செல்வன் படங்களில் நடித்துள்ளார்.

நங்கை நந்தினி: இளம் வயது நங்கை நந்தினி கதாபாத்திரத்தில் சாரா அர்ஜுன் பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் பால் மேனியை பளிச்சென காட்டி ரசிகர்களை பரிதவிப்பில் ஆழ்த்தி உள்ளார்.
இரண்டாம் பாகத்தின் ஓபனிங் ஷாட்டே சாரா அர்ஜுன் குளத்தில் இருந்து குளித்து எழும் காட்சியையே இயக்குநர் மணிரத்னம் வைத்துள்ளார். இளம் வயது நந்தினியாக நடிப்பில் மிரட்டி உள்ள சாரா அர்ஜுன் அடுத்ததாக கொட்டேஷன் கேங் படத்தில் தம் அடிக்கும் இளம் பெண்ணாகவும் நடித்து மிரட்டி உள்ளார்.
இதயமும் ஒரு ரகசிய சுரங்கம்: பொன்னியின் செல்வன் 2 படத்தில் தான் நடித்த காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் சாரா அர்ஜுன் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுத்த செம அழகான தனது புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு கேப்ஷனாக தமிழில், "இதயமும் ஒரு ரகசிய சுரங்கம்" என பதிவிட்டுள்ளார்.

அந்த கேப்ஷனையும் சாராவையும் பார்த்த ரசிகர்கள் என்ன நிலா பாப்பா யார் மீதாவது காதலில் விழுந்து விட்டாரா? இப்படி கவிதையெல்லாம் போடுறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், இந்த இன்ஸ்டாகிராம் ஐடியே சாரா அர்ஜுனோடது இல்லை என்றும் அவருக்கு தமிழே தெரியாது என்றும் நெட்டிசன்கள் இது ஃபேக் ஐடி என கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











