PS 2: கையில் வாளுடன் ராஜராஜ சோழனாக மாறிய ஏஆர் ரஹ்மான்... மிரட்டலாக வெளியான PS Anthem!

: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி ரிலீஸாகிறது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதனையடுத்து பொன்னியின் செல்வன் 2-வின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகள் தொடங்கவுள்ள நிலையில், தற்போது PS Anthem வெளியாகியுள்ளது.

இந்த PS Anthem ஏஆர் ரஹ்மான் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

 PS 2: AR Rahman starrer PS Anthem released for Ponniyin Selvan 2

பொன்னியின் செல்வன் 2 PS Anthem
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி ரிலீஸாகிறது. லைகா தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் 2ம் பாகத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படும் நிலையில், தற்போது PS Anthem வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர், பாடல்கள் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்னர் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து ப்ரொமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

 PS 2: AR Rahman starrer PS Anthem released for Ponniyin Selvan 2

அதனை முன்னிட்டு PS Anthem என்ற மிரட்டலான பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்கள் அனைத்தும் பழமையான இசை பின்னணியில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள PS Anthem ஏஆர் ரஹ்மானின் வழக்கமான ராப் பிளஸ் Fusion இசையில் Innovative-ஆக உருவாகியுள்ளது. முக்கியமாக இந்த PS Anthem பாடலில் யாருமே எதிர்பார்க்காத விதமாக ஏஆர் ரஹ்மானே பொர்பாமன்ஸ் செய்துள்ளார்.

சோழர்களின் பழம்பெருமைகளை கூறும் விதமாக உருவாகியுள்ள PS Anthem பாடலில் ஏஆர் ரஹ்மான் ராஜராஜ சோழனாகவே மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக ஜீன்ஸ், டீ-ஷர்ட், ஓவர் கோட் போட்டு ஸ்டைலிஷாக என்ட்ரி கொடுக்கும் ஏஆர் ரஹ்மான், கையில் இருக்கும் வாளை சுழட்டி ரியல் சோழனாகவே தெறிக்கவிட்டுள்ளார். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஸ்டைலிஷான 2கே கிட்ஸ் ராஜராஜ சோழனாக ஏஆர் ரஹ்மான் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 PS 2: AR Rahman starrer PS Anthem released for Ponniyin Selvan 2

ஏஆர் ரஹ்மான், நபிலா மான் இணைந்து பாடியுள்ள PS Anthem பாடலை சிவா ஆனந்த் எழுதியுள்ளார். இதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகள் விரைவில் நடைபெறவுள்ளது. அதன்படி, சென்னை, கோவை, டெல்லி, கொச்சின், பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, திருச்சி போன்ற நகரங்களில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் வலம் வர உள்ளனர். இந்நிலையில், தற்போது வெளியான PS Anthem இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X