PS 2 Trailer: வெளியானது பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர்... ஆக்ஷனில் மிரட்டும் சோழர் படை!
சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.
கடந்தாண்டு முதல் பாகம் வெளியாகி வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, அடுத்த மாதம் இரண்டாம் பாகம் ரிலீஸாகவுள்ளது.
இதனை முன்னிட்டு பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்று முடிந்தது.
தரமான ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியான பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

PS 2 ட்ரெய்லர் & இசை வெளியீட்டு விழா
கோலிவுட்டின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. லைகா தயாரிப்பில் இரண்டு பாகங்களாக உருவான இந்தப் படத்தின் முதல் பாகம், கடந்தாண்டு செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், ரகுமான், பிரகாஷ்ராஜ், ஜெயராம், பிரபு, ஐஸ்வர்யா லஷ்மி, ஷோபிதா துலிபலா என பெரும் நட்சத்திரப்பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

வெளியானது PS 2 ட்ரெய்லர்
பொன்னியின் செல்வன் முதல் பாகம் ராஜராஜ சோழனாகிய ஜெயம் ரவியும், வந்தியத்தேவனான கார்த்தியும் கடலில் மூழ்குவதைப் போல முடிந்தது. அப்போது ஊமை அரசி அவர்கள் இருவரையும் காப்பாற்ற கடலில் குதிக்கிறார். இதனால் இரண்டாம் பாகத்திற்கு ட்வீஸ்ட் வைத்து முடித்திருந்தார் மணிரத்னம். தற்போது அதன் தொடர்ச்சி என்ன ஆனது என்பதை விவரிக்கும் விதமாக PS 2 ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள்
பாண்டியர்களின் சதி, உள்நாட்டு குழப்பம் போன்றவைகளை சோழர் படை எப்படி சமாளித்தது. நந்தினியின் சூழ்ச்சி வென்றதா இல்லையா என பல புதிர்களுக்கு இரண்டாம் பாகத்தில் விடை உள்ளது. இதுகுறித்து ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக PS 2 ட்ரெய்லர் உருவாகியுள்ளது. மேலும், முதல் பாகத்தை விடவும் PS 2வில் அதிகமான போர் காட்சிகள் பயங்கரமான ஆக்ஷன் மோடில் எடுக்கப்பட்டுள்ளன. ட்ரெய்லரே மிரட்டலாக உள்ளதால் இரண்டாம் பாகம் முழுவதும் இன்னும் மாஸ்ஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஆர் ரஹ்மானின் பின்னணி இசை
முக்கியமாக PS 2 ட்ரெய்லரில் ஏஆர் ரஹ்மானின் பின்னணி இசை படு மிரட்டலாக உள்ளது. சமீபத்தில் தான் இந்தப் படத்திற்கான பின்னணி இசைக்காக லண்டன் சென்றிருந்தார் ஏஆர் ரஹ்மான். அப்போது அவரும் இயக்குநர் மணிரத்னமும் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் டிவிட்டரில் வைரலாகியது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தில் ஏஆர் ரஹ்மானின் பின்னணி இசை பெரிதும் பேசப்படும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

ரசிகர்கள் உற்சாகம்
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் வெளியானதை அடுத்து ரசிகர்கள் அதீத உற்சாகத்தில் உள்ளனர். முன்னதாக பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாரதிராஜா, நடிகர்கள் கமல்ஹாசன், நடிகைகள் குஷ்பூ, ரேவதி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மேலும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஷோபிதா துலிபலா, சரத்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்நிலையில், தற்போது வெளியான பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











