PS 2: அட்வான்ஸ் புக்கிங்கில் அடித்து நொறுக்கும் பொன்னியின் செல்வன் 2... இத்தனை கோடி வசூலா?

சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி ரிலீஸாகிறது.

இதனை முன்னிட்டு இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

அதேபோல், பொன்னியின் செல்வன் 2 டிக்கெட் முன்பதிவுகளும் இரண்டு நாட்களுக்கு முன்னர் தொடங்கியது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் அட்வான்ஸ் புக்கிங் நிலவரம் குறித்து தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.

 PS 2: Ponniyin Selvan 2 collects 15 crores in advance booking

பொன்னியின் செல்வன் 2 பாக்ஸ் ஆபிஸ்:மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி ரிலீஸாகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பரில் வெளியானது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், 600 கோடிக்கும் மேல் வசூலித்திருந்தது.

இதனால், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கும் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகமாகிக்கொண்டே போனது. பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் ட்ரெய்லர், பாடல்கள் வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து, ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளும் களைக்கட்டின. ஒட்டுமொத்த பொன்னியின் செல்வன் படக்குழுவும் கோவை, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, மும்பை, சென்னை என ரவுண்டு அடித்து வருகின்றனர்.

 PS 2: Ponniyin Selvan 2 collects 15 crores in advance booking

இதனிடையே பொன்னியின் செல்வன் 2 வரும் 28ம் தேதி வெளியாவதால், சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் எல்லாமே ரிலீஸில் இருந்து விலகிவிட்டன. இதனால் ஒன்மேன் ஆர்மியாக களமிறங்கும் பொன்னியின் செல்வன் 2 டிக்கெட் புக்கிங் கடந்த இரண்டு நாட்களாக சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து வருகின்றன.

முதல் வாரத்திற்கான டிக்கெட் புக்கிங்கில் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 5 கோடி வரை கலெக்‌ஷன் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. சென்னையின் பெரும்பாலான திரையரங்குகளில் முதல் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் புக்கிங் ஆகிவிட்டன. அதேபோல் உலகின் மற்ற பகுதிகளிலும் பொன்னியின் செல்வன் அட்வான்ஸ் புக்கிங் வேகமெடுத்துள்ளதாம்.

 PS 2: Ponniyin Selvan 2 collects 15 crores in advance booking

பொன்னியின் செல்வன் 2 படத்தை உலகம் முழுவதும் லைகா நிறுவனமே நேரடியாக வெளியிடுகிறது. இதனால், தரமான ப்ரொமோஷன் செய்துள்ள லைகா, அதற்கான பலனை முதல் இரண்டு நாள் அட்வான்ஸ் புக்கிங்கில் எடுத்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் அட்வான்ஸ் புக்கிங் மூலம் 10 கோடி வரை வசூலித்துள்ளதாம். இதன்மூலம் பொன்னியின் செல்வன் 2 அட்வான்ஸ் புக்கிங் மொத்தமாக 15 கோடி ரூபாய் வரை ஆகியுள்ளதாம்.

முன்னதாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை என சொல்லப்பட்டது. இதனால், முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பும் வசூலும் இரண்டாம் பாகத்திற்கு இருக்குமா என சந்தேகம் இருந்தது. ஆனால், அதையெல்லாம் முறியடிக்கும் விதமாக அட்வான்ஸ் புக்கிங் மூலமாகவே பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிக்கொண்டிருக்கிறது பொன்னியின் செல்வன் 2. இதனால், படக்குழுவினரும் உற்சாகத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X