PS 2: சோழர் படை ஓடிடியிலும் படுத்தேவிட்டதய்யா... அமேசானில் வரவேற்பு கிடைக்காத பொன்னியின் செல்வன் 2

சென்னை: கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் படமாக உருவானது.

அதன்படி, பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகியிருந்தது.

அதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு ஓடிடியிலும் அதே நிலைதான் காணப்படுகிறதாம்.

 PS 2: Ponniyin Selvan 2 release on Amazon Prime was not well received by OTT fans

அமேசான் ப்ரைமில் வெளியான பொன்னியின் செல்வன் 2: தமிழ்த் திரையுலகின் கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக உருவானது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை சிறிய மாற்றங்களுடன் மணிரத்னம் இயக்கியுள்ளார். லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அதேபோல், சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சோபிதா துலிபலா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விக்ரம் பிரபு, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ் என பெரும் நட்சத்திரப்பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. அதுமட்டும் இல்லாமல் பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழர்களின் பெருமை, சோழர்களின் வரலாறு என்றெல்லாம் ப்ரொமோஷன் செய்யப்பட்டது.

இதன் காரணமாக பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும், பாக்ஸ் ஆபிஸிலும் 500 கோடிக்கு மேல் வசூலித்தது. ஆனால், அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் இறுதியில் வெளியான பொன்னியின் செல்வன் 2 எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. திரைக்கதை, மேக்கிங், சண்டைக் காட்சிகள் என அனைத்துமே கடும் விமர்சனத்துக்குள்ளாகின.

இதனால், பொன்னியின் செல்வன் 2 பாக்ஸ் ஆபிஸிலும் 300 கோடிகளுக்கு மேல் வசூலிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனையடுத்து நேற்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது பொன்னியின் செல்வன் 2. திரையரங்குகளில் இந்தப் படத்தை மிஸ் செய்தவர்கள் ஓடிடியில் பார்த்து ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமேசான் ப்ரைம் தளத்திலும் சொல்லும்படி போதிய வரவேற்பு கிடக்கவில்லை எனத் தெரிகிறது.

 PS 2: Ponniyin Selvan 2 release on Amazon Prime was not well received by OTT fans

சம்மர் விடுமுறையாக இருந்தபோதும் பொன்னியின் செல்வன் 2 படம் பார்க்க ஓடிடி ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. முன்னதாக பொன்னியின் செல்வன் முதல் பாகம் ஓடிடியில் வெளியான போது, முதலில் ரென்டல் அடிப்படையில் தனியாக கட்டணம் செலுத்தி பார்க்க வேண்டியிருந்தது. ஆனால், பொன்னியின் செல்வன் 2ம் பாகத்துக்கு தனியாக கட்டணம் இல்லாமல் அமேசான் சப்ஸ்கிரைபர்கள் நேரடியாக பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அப்படியிருந்தும் பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு ஓடிடி ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு இல்லையென்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பொன்னியின் செல்வன் 2 படக்குழுவினரே சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X