PS 2: பொன்னியின் செல்வன் 2 ரிலீஸில் லைகா எடுத்த அதிரடி முடிவு... ஷாக்கான கோலிவுட்!
சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியான நிலையில், இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி ரிலீஸாகிறது.
பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் தமிழ்நாடு தியேட்டர் ரைட்ஸை ரெட் ஜெயன்ட் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸில் லைகா எடுத்துள்ள அதிரடி முடிவு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் அப்டேட்
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என எம்ஜிஆர், கமல் போன்றோர் ஆர்வமாக இருந்தனர். ஆனால், இறுதியாக மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவானது பொன்னியின் செல்வன். இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு வெளியானதைத் தொடர்ந்து, வரும் 28ம் தேதி 2ம் பாகம் ரிலீஸாகிறது.
முன்னதாக பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர், பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதேபோல், தமிழ்நாடு தியேட்டர் ரைட்ஸ் ரெட் ஜெயன்ட் கைப்பற்றியதாகவும் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை உலகம் முழுவதும் லைகா நிறுவனமே வெளியிட உள்ளது. இதனை லைகா தனது டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை உலகம் முழுவதும் பல விநியோகஸ்தர்கள் வெளியிட்டனர். ஆனால், தற்போது லைகாவே ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கெல்லாம் காரணம் அஜித்தின் துணிவு திரைப்படம் தான் என சொல்லப்படுகிறது. துணிவு படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை, லைகா நிறுவனம் தான் கைப்பற்றியது. இந்தப் படத்தை பக்காவாக ப்ரோமோஷன் செய்ததால் லைகாவுக்கு பல கோடிகள் லாபம் கிடைத்துள்ளது.
இதனால் பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தையும் சொந்தமாக வெளியிட்டால் சரியான பிஸினஸ் இருக்கும் என லைகா திட்டமிட்டுள்ளதாம். எனவே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளிலும் லைகாவே ரிலீஸ் செய்யவுள்ளது. லைகா தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தை அந்நிறுவனமே சொந்தமாக வெளியிடுவதால், விநியோகஸ்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் இந்தியா தவிர்த்து உலகின் பல நாடுகளிலும் வசூலில் மாஸ் காட்டியது. இதனால், 2ம் பாகத்தையும் சொந்தமாக வெளியிட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூலை மொத்தமாக சுருட்டிவிடலாம் என லைகா முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், விரைவில் பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளதாம்.
இதனிடையே, பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி, மொத்தம் 3 மணி நேரம் 30 நிமிடங்கள் வரை ஓடுவதாக இருந்துள்ளது. அதன்பின்னர் எடிட் செய்யப்பட்டு 2 மணி நேரம் 37 நிமிடங்கள் வரை குறைக்கப்பட்டுள்ளதாம். பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் தொடங்கியதும் தான் மக்களின் மனநிலை என்னவென்பதே தெரியவரும். ஆனாலும், முதல் பாகம் போல, இரண்டாம் பாகத்திலும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் தரமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











