PS 2: பொன்னியின் செல்வன் விழாவில் சிம்பு - த்ரிஷா... மீண்டும் இணையுமா கார்த்தி, ஜெஸ்ஸி ஜோடி?
சென்னை: பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனையடுத்து இப்படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதில், பொன்னியின் செல்வன் படக்குழுவினருடன் கமல், பாரதிராஜா, சிம்பு, உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இந்நிலையில், சிம்பு, த்ரிஷா இருவருக்கும் அடுத்தடுத்து இருக்கைகள் போட்டப்பட்டிருந்தது டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர்
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதன் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பரில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றிப் பெற்றது. இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா இரண்டும் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பாரதிராஜா, கமல், சிம்பு
இந்த விழாவில் இயக்குநர் பாரதிராஜா, நடிகர்கள் கமல்ஹாசன், நடிகை குஷ்பூ உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மேலும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஷோபிதா துலிபலா, சரத்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இவர்களுடன் விழாவின் நாயகர்களான மணிரத்னமும் ஏஆர் ரஹ்மானும் செம்ம மாஸ்ஸாக என்ட்ரி கொடுத்தனர்.

அருகருகே சிம்பு - த்ரிஷா
பொன்னியின் செல்வன் படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் ஆகியோருக்கு முதல் மூன்று வரிசைகளில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில், சிம்பு, த்ரிஷா இருவருக்கும் அடுத்தடுத்து இருக்கைகள் போடப்பட்டிருந்தன. சிம்பும் த்ரிஷாவும் விழாவில் பங்கேற்கும் முன்பே அவர்களது இருக்கைகளை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்யத் தொடங்கினர். இருவருக்கும் அடுத்தடுத்து சீட் போடப்பட்டிருந்தது இந்தளவுக்கு வைரலாகும் என படக்குழுவினரே நினைத்துப் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

கார்த்தி - ஜெஸ்ஸி கம்பேக்
மேலும் பல ரசிகர்கள் இது கார்த்தி - ஜெஸ்ஸி கம்பேக் கொடுக்கும் நேரம் என, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை குறிப்பிட்டு வைரலாக்கி வருகின்றனர். பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் த்ரிஷாவும் ஜெயம் ரவியும் அருகருகே அமர்ந்திருந்தனர். அப்போது ஆய்த எழுத்து படத்தில் இருந்து ஏஆர் ரஹ்மான் இசையில் யாக்கை திரி பாடல் ஒலிப்பரப்பானது. அதற்கு த்ரிஷாவும் அவருக்குப் பின் இருக்கையில் இருந்த சித்தார்த்தும் செம்மையாக வைப் கொடுத்தது வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











