PS 2: எங்கடா இங்க இருந்த Blue Tick-அ காணோம்... த்ரிஷா, ஜெயம் ரவிக்கு விபூதி அடித்த டிவிட்டர்!

சென்னை: பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ப்ரொமோஷன் கோவையில் இருந்து நேற்று தொடங்கியது.

இதற்காக விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி உள்ளிட்ட பொன்னியின் செல்வன் குழுவினர் தனி விமானத்தில் கோவை சென்றிருந்தனர்.

 PS 2: Trisha and Jayam Ravi lost their blue tick on Twitter for PS 2 Promotion

இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 ப்ரொமோஷனுக்காக த்ரிஷாவும் ஜெயம் ரவியும் தங்களது பெயர்களை டிவிட்டரில் மாற்றியுள்ளனர்.

இதனால், த்ரிஷா, ஜெயம் ரவி இருவருக்கும் டிவிட்டர் நிறுவனம் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.

ஜெயம் ரவி, த்ரிஷா ப்ளு டிக் மாயம்
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி ரிலீஸாகிறது. லைகா தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பரில் வெளியாகியிருந்தது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை போலவே PS 2 பட ப்ரொமோஷனும் அமர்க்களமாக தொடங்கியது.

ஏற்கனவே ட்ரெய்லர், பாடல்கள் வெளியானதை அடுத்து, கடந்த சனிக்கிழமை சென்னை அண்ணா யுனிவர்ஸிட்டியில் PS Anthem வெளியிடப்பட்டது. இதில், ஏஆர் ரஹ்மான், விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஜெயராம் உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் படக்குழுவினர் தனி ஜெட் விமானத்தில் கோவை பறந்தனர்.

 PS 2: Trisha and Jayam Ravi lost their blue tick on Twitter for PS 2 Promotion

பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகும் போது, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா ஆகியோர் டிவிட்டரில் தங்களது பெயர்களை மாற்றினர். அதன்படி, அனைவருமே பொன்னியின் செல்வனில் நடித்த தங்களது கேரக்டர்களின் பெயர்களை டிவிட்டரில் வைத்தனர். விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், த்ரிஷா குந்தவையாகவும் வலம் வந்தனர்.

இதேபோல தற்போது பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் ப்ரொமோஷனையும் தொடங்கியுள்ளனர் த்ரிஷாவும் ஜெயம் ரவியும். அவர்கள் இருவர் மட்டும் டிவிட்டரில் அக்கவுண்டில் பெயரை மாற்றியுள்ளனர். அதனால், அவர்களது டிவிட்டரில் இருந்த ப்ளு டிக் நீக்கப்பட்டுள்ளது. எலான் மாஸ்க் கைகளில் டிவிட்டர் நிறுவனம் சென்றதிலிருந்து பல அதிரடி மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

புதிய விதிகளின்படி ஒருவர் தனது ட்விட்டர் கணக்கில் பெயரை மாற்றினால் அவர்களது ப்ளூ டிக் நீக்கப்படுகிறது. அதன்படியே த்ரிஷாவும் ஜெயம் ரவியும் தங்களது ட்விட்டர் பக்கத்தின் ப்ளு டிக்கை இழந்துள்ளனர். ஜெயம் ரவியின் பெயர் இன்னும் அருண்மொழி வர்மன் என்றே இருக்கும் நிலையில், த்ரிஷாவின் பெயர் 'Trish' என்றே உள்ளது. குந்தவையில் இருந்து பெயர் மாறினாலும், த்ரிஷ் என மட்டுமே இருப்பதால் ப்ளு டிக் இல்லை என தெரிகிறது.

 PS 2: Trisha and Jayam Ravi lost their blue tick on Twitter for PS 2 Promotion

பொன்னியின் செல்வன் ப்ரொமோஷனால் ஜெயம் ரவியும் த்ரிஷாவும் டிவிட்டரில் ப்ளு டிக்கை இழந்துள்ளது ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொன்னியின் செல்வன் 2 வரும் 28ம் தேதி வெளியாகவுள்ளதால், அதுவரை இதுதான் நிலைமை என சொல்லப்படுகிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகும் முன்பு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், தற்போது இரண்டாம் பாகம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ரசிகர்களிடம் பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை என்றே சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X