PS 2 மேடையில் லியோ அப்டேட் கேட்ட ரசிகர்கள்... ‘ஒரு லவ் சீன் இருக்கு’... த்ரிஷா கொடுத்த ரியாக்‌ஷன்!

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 இம்மாதம் இறுதியில் வெளியாகிறது.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர், பாடல்கள் வெளியான நிலையில், நேற்று PS Anthem பாடலும் ரிலீஸ் செய்யப்பட்டது.

ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள PS Anthem பாடலுக்கு, அவரே பெர்ஃபாமன்ஸும் செய்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில், PS Anthem பாடல் வெளியீட்டு விழாவில் லியோ அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு த்ரிஷா கொடுத்த ரியாக்‌ஷன் வைரலாகி வருகிறது.

 PS 2: Trishas cute reaction from fans hearing Leo update at the PS Anthem event

பொன்னியின் செல்வன் மேடையில் லியோ அப்டேட்: பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி ரிலீஸாகிறது. லைகா தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார், ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். முதல் பாகத்தை போலவே பொன்னியின் செல்வன் பார்ட் 2-வும் ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தை ப்ரொமோட் செய்யும் விதமாக, PS Anthem என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த PS Anthem வெளியீட்டு விழா சென்னை அண்ணா யுனிவர்ஸிட்டியில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், ஏஆர் ரஹ்மான், விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஜெயராம் உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் பங்கேற்றனர்.

முக்கியமாக PS Anthem வெளியீட்டு விழாவில் இயக்குநர் மணிரத்னம் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கார்த்திக், த்ரிஷா, ஜெயராம் மூவரும் மேடையில் ஏறி ரசிகர்களுக்கு வைப் கொடுத்தனர். அப்போது த்ரிஷா மேடை ஏறியதும் அங்கிருந்த ரசிகர்கள் லியோ அப்டேட் கேட்டு குரல் எழுப்பினர். லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் த்ரிஷாவும் நடித்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற விருது விழா ஒன்றில் பங்கேற்ற போதும், த்ரிஷாவிடம் லியோ அப்டேட் கேட்டு ரசிகர்கள் குரல் எழுப்பினர். அதேபோல் எங்கு சென்றாலும் லியோ அப்டேட் கேட்கும் ரசிகர்கள், நேற்று பொன்னியின் செல்வன் விழாவையும் விட்டுவைக்கவில்லை. இந்நிலையில், PS Anthem வெளியீட்டு விழாவில் லியோ அப்டேட் கேட்ட ரசிகர்களை சமாளிக்க முடியாமல் க்யூட்டாக சிரித்து எஸ்கேப் ஆக நினைத்தார்.

 PS 2: Trishas cute reaction from fans hearing Leo update at the PS Anthem event

ஆனாலும், ரசிகர்கள் விடாமல் லியோ அப்டேட் கேட்டதால், த்ரிஷாவிடம் இருந்த மைக்கை அருகில் நின்று கொண்டிருந்த கார்த்தி வாங்கிக் கொண்டார். மேலும், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் வரும் ஒரு காட்சியை போல, வந்தியத் தேவனும் குந்தவையும் சந்தித்துக்கொள்ளும் காட்சி பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தில் உள்ளது. அந்த லவ் சீன் சூப்பராக இருக்கும் எனக் கூறி ரசிகர்களை கூல் செய்தார்.

இறுதியாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஆர்ஜே விஜய், ரசிகர்களுடன் சேர்ந்துகொண்டு 'உயிர் உங்களுடையது தேவி' என த்ரிஷாவை பார்த்துக் கூறினர். ஆனால், அவரோ இதை நான் தான் சொல்ல வேண்டும் எனக் கூறி, ரசிகர்களை பார்த்து உயிர் உங்களுடையது என்றார். இந்த வீடியோவை த்ரிஷாவின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இறுதியாக பொன்னியின் செல்வன் படத்தின் PS Anthem பாடல் வெளியானது. ஏஆர் ரஹ்மானின் வழக்கமான ராப் பிளஸ் Fusion இசையில் Innovative-ஆக உருவாகியுள்ள இந்த பாடலில், ஏஆர் ரஹ்மானே பொர்பாமன்ஸ் செய்துள்ளார். சோழர்களின் பழம்பெருமைகளை கூறும் PS Anthem பாடலில், ஏஆர் ரஹ்மான் ராஜராஜ சோழனாகவே மாறியுள்ளது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X