twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏமாற வேண்டாம்.. அது ஃபேக் காஸ்டிங் கால்.. விஷமிகளின் வேலை.. எச்சரிக்கை விடுத்த ’ஹீரோ’ இயக்குநர்!

    |

    சென்னை: லாக்டவுனை பயன்படுத்தி சில விஷமிகள், ஆடிஷன் நடப்பதாகக் கூறி பணம் பறிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

    Recommended Video

    ஹீரோ பட கதை திருட்டா ? | DIRECTOR PS, MITHRAN PRESSMEET | HERO MOVIE STORY ISSUE | FILMIBEAT TAMIL

    மக்களை எப்படியெல்லாம் வித விதமாக ஏமாற்றலாம் என ஒரு கூட்டமே மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    தற்போது இயக்குநர் பி.எஸ். மித்ரன், தனது அடுத்த படத்திற்கான நடிகர்களை தேர்வு செய்கிறார் என்ற ஃபேக் காஸ்டிங் கால் மெசேஜ் வைரலாகி வருகிறது.

     'எது தேவையோ அதுவே தர்மம்'.. 20 விருதுகளைக் குவித்து சாதனை படைத்த குறும்படம் ! 'எது தேவையோ அதுவே தர்மம்'.. 20 விருதுகளைக் குவித்து சாதனை படைத்த குறும்படம் !

    இரும்புத்திரை இயக்குநர்

    இரும்புத்திரை இயக்குநர்

    விஷால், சமந்தா, அர்ஜுன் நடிப்பில் டெக்னாலஜியை பயன்படுத்தி எப்படி எல்லாம் மோசடி செய்கின்றனர் என்பதை இரும்புத்திரை என்ற படமாக இயக்கி வெற்றி பெற்றவர் இயக்குநர் பி.எஸ். மித்ரன். இந்நிலையில், தற்போது அவரது பெயரிலேயே ஒரு மோசடி நடந்து வருவதை அறிந்து கொண்ட அவர் அது தொடர்பாக ஒரு எச்சரிக்கை பதிவை தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டுள்ளார்.

    போலி காஸ்டிங் கால்

    போலி காஸ்டிங் கால்

    இரும்புத்திரை, ஹீரோ படங்களை தொடர்ந்து பி.எஸ். மித்திரன் இயக்க உள்ள அடுத்த படத்திற்கு நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள், என் பெயர் ஆர்யன், நான் பி.எஸ். மித்ரனின் அசோசியேட் டைரக்டர், சீக்கிரம் தன்னை தொடர்பு கொண்டால், படத்தில் நடிக்கலாம் என ஆசை வார்த்தைகளை தூவிய மெசேஜ் ஒன்று வைரலாகி வருகிறது.

    ஹீரோ இயக்குநர் எச்சரிக்கை

    ஹீரோ இயக்குநர் எச்சரிக்கை

    தனது பெயரில் இப்படியொரு மோசடி வேலை நடப்பதை அறிந்து கொண்ட ஹீரோ இயக்குநர் மித்ரன், ஆர்யன் என்ற பெயரில் தனக்கு யாரும் தெரியாது என்றும், தன்னுடைய உதவி இயக்குநர்கள் ஒரு போதும், அது போன்ற அறிவிப்பை வெளியிட மாட்டார்கள் என்றும், இது போலியானது, யாரும் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கார்த்தி ஹீரோ

    கார்த்தி ஹீரோ

    இரும்புத்திரை படம் கொடுத்த அளவுக்கு வெற்றியை சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஹீரோ படம் கொடுக்கவில்லை. இந்நிலையில், பி.எஸ். மித்ரன் அடுத்ததாக நடிகர் கார்த்தியின் 22வது படத்தை இயக்க உள்ளார். ஆனால், சுல்தான், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் முடிந்த பிறகே அந்த படம் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    எக்கச்சக்கமாக

    எக்கச்சக்கமாக

    சினிமா கனவுடன் கோடம்பாக்கத்தில் அழைபவர்களை பலரும் இதுபோன்ற ஆசை வார்த்தைகளை காட்டி மோசடி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு ஹீரோயின் சான்ஸ் வாங்கித் தருவதாக கூறி அவர்கள் வாழ்க்கையையே சீரழித்த சம்பவங்களும் நிறைய நடந்துள்ளன. இதனால், இதுபோன்ற போலி வலைகளில் சிக்கிக் கொள்ளாமல், இளைஞர்கள் உஷாருடன் இருப்பது மிகவும் அவசியமான ஒன்று. அதுவும் இந்த லாக்டவுன் காலத்தில் எந்த படத்திற்கான காஸ்டிங்கும் நடக்காது என்பதை புரிந்து கொண்டு எச்சரிக்கையுடன் இருங்கள்.

    English summary
    Director PS Mithran, whose last film was Sivakarthikeyan-starrer 'Hero' has alerted people about a fake casting call for his next film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X