AK 62 முதல் அப்டேட்: அஜித் - மகிழ் திருமேனி கூட்டணியில் இணைந்த சர்தார் பட பிரபலம்..?

சென்னை: துணிவைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தை லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

முன்னதாக ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த நிலையில். அவர் சொன்ன கதையில் அஜித்துக்கும் லைகாவுக்கும் திருப்தி இல்லை என சொல்லப்படுகிறது.

இதனையடுத்து தான் ஏகே 62 படத்தின் இயக்குநராக மகிழ் திருமேனி கன்ஃபார்ம் ஆனதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், அஜித் - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தில் சர்தார் பட பிரபலமும் இணைவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அஜித் - மகிழ் திருமேனி காம்போ

அஜித் - மகிழ் திருமேனி காம்போ

அஜித்தின் ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவது உறுதியானதாக சொல்லப்படுகிறது. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. ஆனால், அவர் சொன்ன கதையில் திருப்தி இல்லாமல் தான் இப்போது மகிழ் திருமேனி சீனில் வந்துள்ளாராம்.

ஏகே 62-வில் இணையும் சர்தார் பிரபலம்

ஏகே 62-வில் இணையும் சர்தார் பிரபலம்

மகிழ் திருமேனியின் படங்களில் திரைக்கதை எப்போதுமே ஸ்ட்ராங்காக இருக்கும். அதனால் அஜித்தும் லைகாவும் துணிந்து இறங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. முக்கியமாக இந்தப் படத்தின் கதையை பிஎஸ் மித்ரன் எழுதியதாக தகவல் கிடைத்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ, விஷால் நடித்த இரும்பு திரை, கடந்தாண்டு கார்த்தியின் நடிப்பில் ரிலீஸான சர்தார் ஆகிய படங்களை இயக்கியவர் பிஎஸ் மித்ரன். இவைகளில் இரும்பு திரை, சர்தார் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

பலமான கூட்டணியில் ஏகே 62

பலமான கூட்டணியில் ஏகே 62

கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு வெளியான சர்தார் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலித்தது. தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளார் பிஎஸ் மித்ரன். இந்த நிலையில், தான் ஏகே 62 படத்தின் கதையை மட்டும் பிஎஸ் மித்ரன் எழுதியதாக சொல்லப்படுகிறது. திரைக்கதையையும் இயக்கத்தையும் மகிழ் திருமேனி கவனித்துக்கொள்ளப் போகிறாராம். இதுவெல்லாம் இப்போது வரை தகவல்களாகவே வெளியாகி வைரலாகி வருகின்றன. விரைவில் முழுமையான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ் மித்ரன், மகிழ் திருமேனி இருவரது பலமான கூட்டணியில் அஜித்தின் ஏகே 62 உருவாகவுள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்தின் ஆக்‌ஷன் ட்ரீட்

அஜித்தின் ஆக்‌ஷன் ட்ரீட்

தடையற தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் படங்கள் மூலம் கவனிக்க வைத்த மகிழ் திருமேனி, ஏகே 62 மேக்கிங் தரமாக இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆவலுடன் இருக்கிறாராம். எப்போதுமே ஆக்‌ஷனில் மாஸ் காட்டும் மகிழ் திருமேனி, அஜித்துக்கும் அவரது ரசிகர்கள் கொண்டாடும் வகையில் பக்கா ட்ரீட் கொடுக்க ரெடியாகிவிட்டாராம். அஜித் - மகிழ் திருமேனி இணைவது குறித்து லைகா விரைவில் அபிஸியலாக அறிவிக்கும் என சொல்லப்படுகிறது. அதன் பிறகே ஏகே 62ல் இணையும் டெக்னிக்கல் டீம் உட்பட மற்ற அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X