படம் ரிலீஸானதுக்கு அப்புறம் கிளாஸ் எடுக்கக் கூடாது.. லோகேஷுக்கும் குட்டு வைத்த பி.எஸ். மித்ரன்?
சென்னை: சர்தார் 2 படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் பிசியாக உள்ள பி.எஸ். மித்ரன் சமீபத்தில் யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தை டார்கெட் செய்தே மறைமுகமாக பேசியது போல உள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு வேற ஒரு படத்தைக் கொடுத்தால் நிச்சயம் அவர்கள் கடுப்பாகத்தான் செய்வார்கள் என்றும் படம் பார்ப்பவர்கள் மடையர்கள் இல்லை என்றும் படம் வெளியான பிறகு அந்த படத்தை பற்றி விளக்கம் கொடுப்பதோ, பாடம் நடத்துவதோ சரியான செயல் அல்ல என பி.எஸ். மித்ரன் தனது பேட்டியில் பேசியுள்ளார்.

இது அப்படியே லோகேஷ் கனகராஜுக்கு சொல்ற மாதிரியே இருக்கே என அந்த பேட்டியை ரஜினிகாந்த் மற்றும் அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து கலாய்த்து வருகின்றனர்.
ஹீரோ படம் ஃபிளாப்பான கதை: ஆனால், இயக்குநர் பி.எஸ். மித்ரன் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய தன்னுடைய ஹீரோ படம் தோல்விப் படமாக மாற என்ன காரணம் என்பதற்கு அளித்த பதில்கள் தான் இவை. சூப்பர் ஹீரோ படம் என படத்தை புரமோட் செய்து விட்டோம். ஆனால், வந்து பார்த்த ரசிகர்களுக்கு நான் கருத்து சொல்லிட்டு இருந்தா புடிக்குமா? அதான் படம் ஓடவில்லை என பளிச்சென பேசியுள்ளார்.
ரசிகர்கள் மடையர்கள் கிடையாது: ரசிகர்களுக்கு புரியும் படி ஒரு படத்தை இயக்குநராகிய நாம் தான் சரியாக கொடுக்க வேண்டும். இப்போதெல்லாம் படத்தின் கதைக்காக ரசிகர்கள் படம் பார்க்க வரவில்லை. ஜெயம் ரவி, சிம்பு, தனுஷ், விஷால், கார்த்தி உள்ளிட்டவர்கள் அறிமுகமான கால கட்டத்தில் படத்தின் கதைக்காக ரசிகர்கள் பார்க்க வந்தார்கள். ஆனால், இப்போ தங்களுக்கு புடிச்ச ஹீரோவை தியேட்டரில் பார்க்க மட்டுமே ரசிகர்கள் வருகின்றனர். அவர்களை இயக்குநர்கள் சரியாக என்டர்டெயின் செய்து விட்டாலே போதும் எனக் கூறியுள்ளார்.
ரிலீஸுக்கு பிறகு கிளாஸ் எடுக்கக் கூடாது: என்னோட ஹீரோ படத்தை நான் சரியாக மக்களிடம் கன்வே செய்யவில்லை. ஆரம்பத்தில் எனக்கும் கோபம் இருந்தது. அதன் பின்னர் தான் புரிந்துக் கொண்டேன். மக்கள் முட்டாள்கள் அல்ல, நீ தான் மடையன் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். படம் வெளியான பின்னர் இந்த நோக்கத்துக்காகத்தான் படம் எடுத்தேன். இத்தனை குறியீடுகள் வைத்திருக்கிறேன் என்றெல்லாம் பாடம் நடத்தக் கூடாது. ரசிகர்களுக்கு ஒரு படம் பிடித்து விட்டால் நிச்சயம் கொண்டாடுவார்கள். பிடிக்கவில்லை என்றால் தூக்கிப் போட்டு விடுவார்கள் என பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











