ப்பா.. மாப்பிள்ளை கோலத்தில் பி.எஸ். மித்ரன் எப்படி இருக்காரு பாருங்க.. கோலாகலமாக நடந்த திருமணம்!
சென்னை: இரும்புத்திரை, ஹீரோ, சர்தார் படங்களை இயக்கிய இயக்குநர் பி.எஸ். மித்ரன் - ஆஷாமீரா ஐயப்பன் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இன்று திருமணம் நடைபெற்றது. இயக்குநர்கள் ரத்னகுமார், ரவிக்குமார் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில், இயக்குநர் பி.எஸ். மித்ரனுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பி.எஸ். மித்ரன் திருமணம்
நடிகர் விஷால், சமந்தா நடிப்பில் கடந்த 2018ல் வெளியான இரும்புத்திரை படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் பி.எஸ். மித்ரன் திருமணம் இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. ஆஷாமீரா ஐயப்பன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன.

சமூக அக்கறை கொண்ட இயக்குநர்
தமிழ் சினிமாவில் சமூக கருத்துக்களை தொடர்ந்து வலியுறுத்தி வரும் இயக்குநராக பி.எஸ். மித்ரன் கவனம் ஈர்த்து வருகிறார். இரும்புத்திரை படத்தில் டெக்னாலஜி திருட்டு பற்றி படம் எடுத்த மித்ரன் ஹீரோ படத்தில் அறிவுத் திருட்டு கதையை படமாக இயக்கி இருந்தார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான கார்த்தியின் சர்தார் படத்தில் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் தண்ணீரால் ஏற்படும் பிரச்சனை குறித்து ஆழமாக பேசியிருந்தார்.

கார் பரிசளித்த கார்த்தி
சர்தார் திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், இயக்குநர் பி.எஸ். மித்ரனுக்கு நடிகர் கார்த்தி கார் பரிசளித்தார். மேலும், சர்தார் 2 திரைப்படத்தில் நடிக்கப் போவதாகவும் அதிரடியாக கார்த்தி அறிவித்து இயக்குநரை ஹேப்பி ஆக்கினார்.

இயக்குநர்கள் பங்கேற்பு
இயக்குநர் பி.எஸ். மித்ரன் திருமணத்தில் ஆடை பட இயக்குநர் ரத்னகுமார், அயலான் பட இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர். அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

குவியும் வாழ்த்து
இயக்குநர் பி.எஸ். மித்ரன் கடந்த ஆண்டு ஆஷமீரா ஐயப்பனை நிச்சயம் செய்த நிலையில், பிப்ரவரி 12ம் தேதியான இன்று திருமணம் செய்து கொண்டார். அதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.

காதலர் தின ஸ்பெஷல்
காதலர் தினத்தை முன்னிட்டு காதலித்த பெண்ணை இயக்குநர் பி.எஸ். மித்ரன் திருமணம் செய்து கொண்ட நிலையில், இதுதான் சரியான காதலர் தின ஸ்பெஷல் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். சர்தார் 2 படத்தின் அப்டேட்டை சொல்லுங்க என நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் வாழ்த்துக்களுடன் அப்டேட்டையும் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











