Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அமெரிக்காவில் விஜய்யின் பீஸ்ட் படத்தை முந்திய பொன்னியின் செல்வன்..அடுத்த டார்கெட் விக்ரம் படம்தான்!
அமெரிக்காவில் விஜய்யின் பீஸ்ட் படத்தை முந்திய பொன்னியின் செல்வன்.. அடுத்த டார்கெட் விக்ரம் படம்தான்!
சென்னை : பொன்னியின் செல்வன் பிரம்மாண்டமான படைப்பாக இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.
இந்தப் படத்தை மணிரத்னம் இயக்கியுள்ள நிலையில், முன்னணி நடிகர்களான கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம் படத்தில் இணைந்துள்ளனர்.
படம் இன்னும் இரு தினங்களில் சர்வதேச அளவில் ரிலீசாக உள்ள நிலையில், புக்கிங் செய்ய ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதே
வெள்ளை
சட்டை..
குனிந்த
தலை..
பீஸ்ட்
போஸ்டர்
காப்பியா
துணிவு
செகண்ட்
லுக்?
ரசிகர்கள்
கலாய்!

சிறப்பான பிரமோஷன்
படத்தின் பிரமோஷனும் மிகச்சிறந்த வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து போஸ்டர்கள், ப்ரமோக்கள் என சமூக வலைதளங்களை தெறிக்கவிட்டு வருகிறது படக்குழு. ஒருபுறம் படத்தின் நடிகர், நடிகைகளும் பிரமோஷனல் டூரில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் துவங்கிய இந்தப் பயணம் தற்போது டெல்லியில் நிலை கொண்டுள்ளது.

அடுத்தடுத்த வெளியீடுகள்
நடிகர், நடிகைகளின் பேட்டிகள், புகைப்படங்கள் என அனைத்திலும் பிரம்மாண்டம் தெரிகிறது. படம் குறித்த பகிர்வுகள், அனுபவங்களையும் நடிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இதுபோன்ற ஒரு வரலாற்று காவியத்தில் நடித்ததற்கும் மணிரத்னம் இயக்கத்தில் இணைந்ததற்கும் அவர்கள் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.

விற்றுத் தீர்க்கும் புக்கிங்குகள்
இதனிடையே படம் ரிலீசுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், படத்தின் புக்கிங்குகள் துவங்கப்பட்டு அனைத்து இடங்களிலும் விற்று தீர்ந்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவில் முதல் நாள் முதல் ஷோவிற்கான புக்கிங்கில் 30 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளன. முதல் வார இறுதியில் இந்த புக்கிங்குகள் எகிறியுள்ளன.

பீஸ்ட் கலெக்ஷனை ஓரங்கட்டிய பொன்னியின் செல்வன்
அமெரிக்காவில் இதுவரை வெளியான தமிழ் படங்களில் முதல் நாள் முதல் ஷோவிற்கான அதிகமாக டிக்கெட்டுகளை விற்று சாதனை புரிந்திருந்த பீஸ்ட் படத்தின் சாதனையை தற்போது பொன்னியின் செல்வன் பீட் செய்துள்ளது. தொடர்ந்து சாதனைப் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள விக்ரம் படத்தின் சாதனையையும் முறியடிக்க முன்னேறி வருகிறது.

ரசிகர்களின் காத்திருப்பு
இதேபோல மலேசியா, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட நாடுகளிலும் அதிகமான விக்கெட்டுகளை விற்று சாதித்து வருகிறது. மொத்தத்தில் தமிழில் இதுபோன்ற பிரம்மாண்ட படைப்பிற்காகவே ரசிகர்கள் காத்திருந்தது போல இந்த டிக்கெட்டுகள் விற்பனையில் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.