PS1: இப்படி எதிர்பார்க்கலயே.. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மிரட்டுறாங்களே!

சென்னை: எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி திடீரென இப்படியொரு பிரம்மாண்ட அப்டேட்டை கொடுத்து ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் பார்வையையும் தன் பக்கம் திருப்பி உள்ளது லைகா நிறுவனம்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட காவிய படைப்பான பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர்களின் மெய் சிலிர்க்க வைக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை தனித் தனியாக வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு போஸ்டரையும் ஒவ்வொரு நாள் வெளியிட்டு மாஸ் காட்டியிருக்கலாம் என்கிற வியாபார யுக்தி கூட லைகாவுக்கு தெரியலையே என ரசிகர்களே கிண்டல் செய்து வருகின்றனர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள வரலாற்று படைப்பான பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ் தேதியை லைகா நிறுவனம் எந்தவொரு சர்ப்ரைஸ் ஹைப்பும் உருவாக்காமல் தற்போது அசால்ட்டாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி பொன்னியின் செல்வன் உலகை ஆள வருகிறான்.

பாக்ஸ் ஆபிஸ் தெறிக்கப்போகுது

பாக்ஸ் ஆபிஸ் தெறிக்கப்போகுது

கடந்த இரு ஆண்டுகளாக தியேட்டர்கள் மூடிக் கிடந்து மிகப்பெரிய இழப்பை சந்தித்து வரும் நிலையில், இந்த ஆண்டு அஜித்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், விஜய்யின் பீஸ்ட், கமலின் விக்ரம், சிவகார்த்திகேயனின் டான் மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் என தியேட்டர் ஓனர்களை சந்தோஷத்தில் திளைக்க வைக்க தொடர்ந்து பெரிய படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

ஆதித்த கரிகாலன்

ஆதித்த கரிகாலன்

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை எம்ஜிஆர் முதல் பலர் படமாக்க நினைத்தனர். இந்நிலையில், அந்த கனவை இயக்குநர் மணிரத்னம் நினைவாக்கி உள்ளார். பொன்னியின் செல்வன் கதையில் முக்கிய பங்கு வகிக்கும் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். வீர வாளை பிடிக்க போராடும் மிரட்டலான போஸ்டர் வெளியாகி அவரது லுக்கை உலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.

நந்தினி

நந்தினி

பொன்னியின் செல்வன் கதையின் முக்கிய கதாபாத்திரமான நந்தினி தேவியாக நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். அழகே பொறாமைப்படும் பேரழகியாக நடிகை ஐஸ்வர்யா ராய் இருக்க அவரது கண்களில் சோழர் குலத்தையே பழிவாங்கும் எண்ணம் மட்டும் பொங்கி வருவது போல அவரது போஸ்டர் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

வந்தியத்தேவன்

வந்தியத்தேவன்

பொன்னியின் செல்வன் கதையில் அருள்மொழி வர்மன் ஒரு ஹீரோ என்றால் இன்னொரு ஹீரோ கதையை கொண்டு செல்லும் நாயகன் வந்தியத்தேவன் தான். அந்த கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார். மற்ற நடிகர்களை விட மிகவும் வித்தியாசமாக அவரது தோற்றம் இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் ரசிகர்களை மிரட்டி வருகிறது.

குந்தவை

குந்தவை

வந்தியத்தேவனுக்கு ஜோடியாகவும் அருள்மொழிவர்மனுக்கு சகோதரியாகவும் கதையில் வரும் குந்தவை தேவியாக நடிகை த்ரிஷா அழகு மிளிர நடந்து வரும் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இப்படியான தோற்றத்தில் இந்த படம் உருவாகி வரும் என ரசிகர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காத நிலையில், ஒவ்வொரு போஸ்டர்களும் மெய் சிலிர்க்க வைக்கின்றன.

அருள்மொழி வர்மன்

அருள்மொழி வர்மன்

கதையின் நாயகன் அருள்மொழி வர்மனாக நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது கையில் வாளுடன் பொன்னியின் செல்வன் இருக்கும் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜெயம் ரவி ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு சென்று இருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விரைவில் பொன்னியின் செல்வன் டீசரை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X