உதயநிதிக்கும் ஒரு ’உன்ன நினைச்சு’ பாட்டு போட்ட இசைஞானி!
Recommended Video
சென்னை: கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் 'உன்ன நினைச்சு பாட்டு படிச்சு' பாடல் ஆல் டைம் ஃபேவரைட் பாடலாக உள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினின் சைக்கோ படத்தில் மீண்டும் 'உன்ன நினைச்சு' என்ற பாடலை இசைஞானி இளையராஜா போட்டுள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் படம் சைக்கோ. இந்த படத்திற்கும், மிஷ்கினின் ஆஸ்த்தான இசையமைப்பாளரான இளையராஜா இசையமைத்துள்ளார்.

இளையராஜா இசையில், சித் ஸ்ரீராம் குரலில் உருவாகியுள்ள 'உன்ன நினைச்சு' பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது என்ற அறிவிப்பை சற்றுமுன் சோனி மியூசிக் செளத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியான சைக்கோ டீசர், பலரது பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றுள்ள நிலையில், விரைவில் சைக்கோ படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தில் பார்வையற்ற மனிதராக நடித்துள்ளார். ஆல்ஃபர்ட் ஹிட்ச்காக் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான சைக்கோ படம், த்ரில்லர் படங்களையும் சைக்கோ படங்களையும் இயக்கும் இயக்குநர்களுக்கு ஒரு பல்கலைக்கழகமாக இருந்து வரும் நிலையில், ஹிட்ச்காக்கின் தீவிர ரசிகரான மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த சைக்கோ படமும் தமிழ்சினிமாவில் பல சாதனைகளை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு கல் ஒரு கண்ணாடி, நண்பேண்டா, சரவணன் இருக்க பயமேன் போன்ற காமெடி படங்களில் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், திடீரென மனிதன், நிமிர், தற்போது சைக்கோ என நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார்.
அரசியலிலும் தீவிரத்தை காட்டத் தொடங்கியுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு சைக்கோ படம் பெரிய அளவு வெற்றியையும் நல்ல நடிகர் என்ற பெயரையும் நிச்சயம் பெற்றுத் தரும்.


Click it and Unblock the Notifications











