ஜனவரி 24ல் வெளியாகப் போகுது சைக்கோ.. மிஸ்கின் குஷி
சென்னை: மிஸ்கினின் இயக்கத்தில் உருவாகி வரும் சைக்கோ ஜனவரி 24ந் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
புத்தாண்டை ஒட்டி பல சர்ப்ரைஸ்களை பல படக்குழுவினரும் கொடுத்து வருகின்றனர். இதையடுத்து சைக்கோ படக்குழுவும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி விருந்து கொடுத்து இருக்கிறது. சைக்கோ படம் ஜனவரி 24 வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

துப்பறிவாளன் படத்திற்கு பிறகு மிஸ்கின் இயக்கி இருக்கும் படம் தான் சைக்கோ. இந்த படத்தில் உதயநிதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். உதயநிதி இந்த படத்தில் கண் பார்வையற்றவராக நடித்து இருக்கிறார். மேலும் நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதரி, இயக்குனர் ராம் , சிங்கம் புலி, ஆடுகளம் நரைன் ஆகியோர் நடித்து இருகின்றனர் .
தற்போது இந்த படத்தை இயக்கி விட்டு, துப்பறிவாளன்2 படத்திற்காக லண்டன் சென்று இருந்தார் மிஸ்கின் சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இந்தியா திரும்பினார்.
தற்போது சைக்கோ படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டு இருக்கிறது. இந்த படத்திற்கு இசைஞானி இசையமைத்துள்ளர் இந்த படத்தில் 'உன்னை நினைச்சி நினைச்சி' பாடல் ஹிட்டாகி அனைவரும் விரும்பும் பாடலாக உருவாகி உள்ளது.
அதே தேதியில் மற்ற சில படங்கள் வெளியாக போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடித்திருக்கும் படமான ஜிப்ஸி படம் வெளியாக போவதாக அந்த படக்குழு அறிவித்து இருந்தது.
அதன் பின் சேரன் கதாநாயகனாக நடித்திருக்கும் ராஜாவுக்கு செக் படமும் அதே தேதியில் வெளியாகும் என்று அந்த படக்குழு தெரிவித்துள்ளது. வைபவ் நடிப்பில் உருவாகி இருக்கும் டாணா படமும் அதே தேதியில் வெளியாக தயாராக உள்ளது.
அனைத்து படக்குழுவினரும் படத்தை வெளியிட தயாராக இருப்பதால் தேதியை அறிவித்துள்ளனர். ஆனால், படங்கள் அனைத்தும் சொன்ன தேதியில் வெளியாகுமா என்று தெரியவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் பொங்கலுக்கு வெளியாக உள்ளது மற்றும் தனுசின் பட்டாசும் அப்போதே வெளிவர தயாராக உள்ளது. இதனால் இந்த படங்கள் ஜனவரி 24ந் தேதி வெளியாக காத்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











