விஜய் நிஜத்தில் ஹீரோ.. 27 வருஷமா கூட இருந்த பி.டி. செல்வகுமார்.. ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு!
சென்னை: செயலில் ஜீரோ.. நிஜத்தில் விஜய் ஹீரோ என பேசிவிட்டு, அச்சச்சோ நிஜத்தில் ஜீரோ என மாற்றி பேசியது பத்திரிகையாளர் சந்திப்பில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. 27 வருஷமா அவரை புகழ்ந்து பேசிய வாய் அப்படித்தான் பேசும் என தவெக தொண்டர்களும் தளபதி ரசிகர்களும் கலாய்த்து வருகின்றனர்.
விஜய்யின் முன்னாள் மேனேஜரான பி.டி. செல்வகுமார் விஜய்யை விட்டு வெளியே வந்த நிலையில், திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து விஜய் மற்றும் அவரது பர்சனல் வாழ்க்கை பற்றிய பல ரகசியங்களை அம்பலப்படுத்துகிறேன் என விஜய்க்கு எதிரான அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார்.

மகன் ஜேசன் சஞ்சய்க்கே விஜய் எந்த உதவியும் செய்யவில்லை என பகீர் குண்டை தூக்கிப் போட்டுள்ள பி.டி. செல்வகுமார் கண்டிப்பாக விஜய் மக்களுக்கும் எந்த நல்லதும் செய்ய மாட்டார். அவரை நம்பி போனால் பாதியிலேயே விட்டு விட்டு ஓடிவிடுவார் என்றுள்ளார்.
27 வருஷம் அவருடன் இருந்தேன்: விஜய்யுடன் 27 வருஷம் பயணித்து அவரிடம் கற்றுக் கொண்டது என்னவென்றால் நம்பிக்கையான நேரத்தில் விட்டு விட்டு அப்படியே ஓடிவிடுவார் என பி.டி. செல்வகுமார் பேசியுள்ளார். தொடர்ந்து பல பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் விஜய் பற்றிய ரகசியங்களை வெளியிடுகிறேன் என்கிற பெயரில் விஜய்யை அட்டாக் செய்து வருகிறார் முன்னாள் மேனேஜரான பி.டி. செல்வகுமார்.
நிஜத்தில் ஹீரோ: விஜய் செயலில் ஜீரோ.. நிஜத்தில் ஹீரோ என பேசிவிட்டு, அய்யய்யோ தப்பா பேசிட்டேனே என புரிந்துக் கொண்டு இல்லை இல்லை விஜய் நிஜத்திலும் ஜீரோ என பத்திரிகையாளர் சந்திப்பில் பி.டி. செல்வகுமார் பேசிய வீடியோ காட்சி ஒன்று வைரலாகி வருகிறது. 27 வருடமாக அவரது காசுல சாப்பிட்ட வாய் அதன் நன்றியை மறக்கவில்லை என விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
வெளுத்து வாங்கிய பி.டி. செல்வகுமார்: விஜய்யை புகழ்ந்து பேசிவிட்டோமே என சுதாரித்துக் கொண்ட பி.டி. செல்வகுமார் விஜய் ஒரு ஜீரோ என மீண்டும் தனது பேச்சை தொடங்கி விஜய்க்கு எதிராக அட்டாக் மோடில் பேசியுள்ளார். ஜேசன் சஞ்சய் 4 வருஷமாக படம் எடுத்து ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வரும் நிலையில், கூட விஜய் உதவவில்லை என்று பேசினார். விஜய் தனது சொந்த குடும்பத்தினருக்கே கடன் கொடுத்ததாக வெளியான தகவல்கள் ஏற்கனவே சோஷியல் மீடியாவில் பற்றி எரிந்து வரும் நிலையில், பி.டி. செல்வகுமாரும் விஜய்க்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார்.


Click it and Unblock the Notifications











