ஜனநாயகன் படத்தை திருட்டுத்தனமாக பார்த்த பிடி செல்வகுமார்.. அவரே வாயை கொடுத்து மாட்டிக்கிட்டாரே!
சென்னை: விஜய் தான் ஜனநாயகன் படத்தை லீக் செய்து விட்டு அனுதாப அலையை கவர முயற்சிக்கிறார் என குற்றச்சாட்டுகளை முன் வைக்க நாகர்கோவிலில் பத்திரிகையாளர்களை சந்தித்த பிடி செல்வகுமார், இன்று காலை நானும் ஜனநாயகன் படத்தை பார்த்தேன் என்றும் உலகம் முழுவதும் அந்த படத்தை பலரும் பார்த்து விட்டனர் என்றும் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் முன்னாள் மேனேஜரான பிடி செல்வகுமார் திமுகவில் இணைந்த போது தொடர்ந்து விஜய்க்கு எதிராக ஏகப்பட்ட விசயங்களை அம்பலப்படுத்தினார். ஆனால், கடைசியில் திமுகவில் அவருக்கு சீட் கிடைக்காத நிலையில், திமுகவில் இருந்தும் வெளியேறிவிட்டார்.

விஜய்க்கு எதிராக ஓவராக பேசி வந்த மீசை ராஜேந்திரனும் தேமுதிகவை விட்டு வெளியேறினார். இவரும் திமுகவை விட்டு வெளியேறிவிட்டாரே என ரசிகர்கள் இருவரையும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
விஜய் தான் காரணம்: படமே விஜய்யோட படம் தான் என்றும் எடிட்டர், கேமரா மேன் என எல்லாருமே விஜய்யோட ஆட்கள் தான். இத்தனை கோடி படம்னு சொல்றாங்க, ஆனால், அது லீக் ஆகும் அளவுக்கு எப்படி விடுவாங்க, இவங்களே எலக்ஷனுக்கு முன்னாடி லீக் செய்துவிட்டு பல 100 கோடி விஜய்க்கு நஷ்டத்தை ஏற்படுத்திட்டாங்க என அனுதாப அலையை உருவாக்க பார்க்குறாங்க, இதெல்லாம் நம்பியார் காலத்து டெக்னிக் என்கிற ரீதியில் விஜய்யின் மாஜி மேனேஜர் பி.டி. செல்வகுமார் பேசினார்.
மாட்டிக்கிட்ட பங்கு: ஜன நாயகன் படத்தை இன்று காலையில் தான் பார்த்தேன். அதில், தெளிவாக எடிட்டர் வெர்ஷன் என உள்ளது. இந்த காலத்தில் ஏகப்பட்ட செக்யூரிட்டி இருக்கும் போது, எடிட்டர் வெர்ஷன் படக்குழுவிடம் இருந்து தான் கசிந்திருக்க வேண்டும் என்றார். உடனடியாக பத்திரிகையாளர்கள் ஜன நாயகன் திருட்டுப் பிரின்ட்டை பார்க்கக் கூடாது என்றும் பார்த்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நீங்க படத்தை எப்படி பார்த்தீங்க என்கிற கேள்வியை எழுப்பியதும், நான் முழு படத்தை எல்லா பார்க்கல, சில காட்சிகளை கொண்டு வந்து காட்டினாங்க, அதைத்தான் பார்த்தேன். உலகம் முழுவதும் ஜன நாயகன் படத்தை எல்லாருமே பார்த்துட்டாங்க என பம்ம ஆரம்பித்து விட்டார்.
நடவடிக்கை பாயுமா?: ஜன நாயகன் படத்தை பலரும் திருட்டுத் தனமாக பார்த்து வரும் நிலையில், சில இடங்களில் கேபிள் டிவிக்களிலும், பேருந்துகளிலும் கூட ஜனநாயகன் திருட்டு வெர்ஷனை போட்டுப் பார்த்து வருகின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என படக்குழு எச்சரித்துள்ளது. அன்னபூர்ணா ஸ்டூடியோவில் இருந்து தான் கசிந்ததா? என்கிற விசாரணையும் எடிட்டர் சங்க அறிக்கைக்குப் பிறகு சூடு பிடித்துள்ளது என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











