பப்ஜி விரிவாக்கம் என்ன?: கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கேட்ட அமிதாப், உங்களுக்கு தெரியுமா?

By Siva

மும்பை: கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியில் பப்ஜியின் விரிவாக்கம் என்ன என்று அமிதாப் பச்சன் கேள்வி கேட்டது சமூக வலைதளத்தில் வைரலாகிவிட்டது.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடத்தும் கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியின் 11வது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இந்தி ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலம்.

PUBG gets trending on social media: Thanks to KBC 11

அமிதாப் பச்சன் போட்டியாளரிடம் கேள்விகள் கேட்க, கேட்க மக்கள் அதை டிவியில் பார்த்து பதில் அளிக்கத் தவறுவது இல்லை. கடந்த 19ம் தேதி இரவு நடந்த நிகழ்ச்சியில் விவேக் பகத் என்பவர் கலந்து கொண்டார்.

அமிதாப் விவேக்கிடம் பல கேள்விகள் கேட்டார். இருப்பினும் பலருக்கும் பரிட்சயமான பப்ஜியின் விரிவாக்கம் என்ன என்று அமிதாப் கேட்க விவேக் தடுமாறிவிட்டார். இளம் தலைமுறையினர் எப்பொழுது பார்த்தாலும் பப்ஜி விளையாடி வரும் நிலையில் க்ரோர்பதி நிகழ்ச்சியில் அந்த கேள்வி கேட்கப்பட்டது.

PUBG gets trending on social media: Thanks to KBC 11

விவேக்கிற்கு பதில் தெரியாததால் அவர் பார்வையாளர்களின் கருத்தை கேட்க(லைஃப் லைன்) விரும்புவதாக தெரிவித்தார். அரங்கில் இருந்த பார்வையாளர்களில் 92 சதவீதம் பேர் பப்ஜி என்றால் Player Unknown's Battlegrounds என்று தெரிவித்தனர். இதையடுத்து விவேக் அந்த பதிலை ஏற்பதாக கூறினார். பார்வையாளர்கள் தெரிவித்தது தான் பப்ஜியின் சரியான விளக்கம் ஆகும்.

விவேக் அந்த நிகழ்ச்சியில் வெறு ரூ. 10 ஆயிரம் மட்டுமே வென்றார். இந்நிலையில் க்ரோர்பதி நிகழ்ச்சியில் பப்ஜி குறித்து கேட்டது சமூக வலைதளங்களில் டிரெண்டாகிவிட்டது.

அமிதாப் பச்சன் சிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X