விஜய்சேதுபதி வெளியிட்ட வெப் சீரிஸ் பப்கோவா.. 27 முதல் ஜீ5 ஓடிடியில் காணலாம்
சென்னை : முதல் வர்சுவல் ரியாலிட்டி (Virtual Reality) த்ரில்லர் வெப் சீரிஸான 'பப்கோவா' பற்றிய அறிவிப்பை ஜீ5 வெளியிட்டுள்ளது.
இந்த வெப் சீரிஸில் நடிகை விமலா ராமன் நடித்த 'பப்கோவா' வெப் சீரிஸ் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்
குவரண்டினில் பல வெப் சீரிஸ்கள் பிரபலம் ஆகி வரும் நிலையில் ஜீ5 ஏற்கனவே பல வெப் சீரிஸ்களை வெளியிட்ட தளம் தற்போது பப்கோவா என்ற வெப் சீரிஸின் டீசர் வெளியாகி உள்ளது

வெப் சீரிஸ்கள்
ஜீ 5 என்பது ஒரு ஓடிடி தளம் பல திரைப்படங்களை வெளியிட்ட ஜீ5 தளம் பல வெப் செரிஸ்க்களை வெளியூட்டுள்ளது. ரத்தம் தெரிக்க தெரிக்க கேங்ஸ்டர் வெப் சீரிஸ், பல கவர்ச்சியான வெப் சீரிஸ்க்களை வெளியிடுள்ளது ஜீ5 நிறுவனம்

கதை
அதிபயங்கரமான துப்பாக்கி சூட்டுக்கு வழிவகுக்கும் சம்பவங்கள் மற்றும் அதற்கு பிறகான சம்பவங்களை பற்றிய நான் லீனியர் கதையைக் கொண்டது பப்கோவா வெப் சீரியஸ். இது இரண்டு வித்தியாசமான கோணங்களில் இருந்து சொல்லப்படும் ஒரு கதை.

பப்கோவா
ஒரு கதை கொடூரமான துப்பாக்கி சூடு சம்பவத்தை பற்றி விசாரிக்கும் ஒரு பெண் போலீஸ் அதிகாரியை பற்றியது, மற்றொன்று உயிர் பிழைத்த ஒருவர் காணாமல் போன தனது காதலியை தேடும் கதை.

கதாபாத்திரங்கள்
பிரபல நடிகை விமலா ராமன் பெண் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சம்பத் ராம், ஆர்யா, சாரா அன்னையா, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், தேவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

குழுவினர்
'பப்கோவா' வெப் சீரிஸ் லக்ஷ்மி நாராயணா இயக்க, கார்த்தி கே தில்லை ஒளிப்பதிவு செய்கிறார். இசை சாந்தன், எடிட்டர்அஸ்வின் இக்னாஷியஸ், கலை இயக்குனர், சிவ குமார் வரும் 27 முதல் ஜீ5 தளத்தில் 'பப்கோவா' ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications











