ஜி.பி முத்து வீடு முற்றுகை.. ஊர் மக்கள் செய்த ரகளை.. நிலத் தகராறில் ஒற்றை ஆளாய் போராடும் ஜி.பி. முத்து

தூத்துக்குடி: சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமடைந்தவர் ஜி.பி. முத்து. இவர் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அவரது ஊரான தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பெருமாள்புரத்தில் நத்தம் சர்வே எண் 233 கீழத்தெரு இருந்தது. அந்த இடம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம். பொதுமக்கள் அந்த பாதையை பயன்படுத்தி இருந்தனர். ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் அந்த தெரு காணவில்லை என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக, பெருமாள் புரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஜி.பி. முத்து வீட்டை முற்றுகை இட்டுள்ளனர்.

ஏற்கனவே கூறியதைப்போல், சமூக வலைதளம் மூலம் பிரபலமானவர் ஜி.பி. முத்து. கொரோனா காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலும் போனும் கையுமாக இருந்தது, இவரை பரவலாக அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்தது. செலிபிரிட்டி ஜி.பி. முத்துவின் யூடியூப் பக்கத்தில் அவருக்கு இணையவாசிகள் எழுதும் கடிதத்தை அவர் படிக்கும் வீடியோக்களுக்கு மில்லியன் கணக்கில் வியூவ்ஸ்கள் குவிந்தது. அதன் பின்னர், விஜய் டிவியில் குக் வித் கோமாளி, பிக் பாஸ், சன் டிவியில் டாப் குக், டூப் குக் என கலக்கி வருகிறார். இது மட்டும் இல்லாமல், சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Public Cames To Attacks GP Muththu and His House After He Files Complaint Against Street Missing

தெருவைக் காணோம்: இப்படியான நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது மனைவியுடன் சென்று புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்தது, தனது ஊரில் இருந்த சாலையை மற்றவர்கள் அபகரித்து விட்டார்கள். இதனால் எனது இடத்திற்கு வரும் சாலையை காணவில்லை என்று புகார் அளித்தார். அதில், உடன்குடி பெருமாள்புரத்தில் நத்தம் சர்வே எண் 233 கீழத்தெரு இருந்தது. அந்த இடம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம். பொதுமக்கள் அந்த பாதையை பயன்படுத்தி இருந்தனர். ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் அந்த தெரு தற்போது காணவில்லை. தனி நபர்கள் பயன்படுத்தி பாதையை ஆக்கிரமிப்பு செய்து விட்டார்கள். எனவே அந்த இடத்தை அளந்து பாதையை மீட்டுத் தரவேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

வீடு முற்றுகை: இந்நிலையில் இன்று ஜி.பி. முத்துவின் வீட்டை பெருமாள் புரத்தைச் சேர்ந்த மக்கள் முற்றுகையிட்டனர். மேலும், அவர்கள், ஜி.பி. முத்து ஒழிக என்று கோஷமிட்டார்கள். காவலர்கள் அந்த இடத்தில் இருந்ததால் கை கலப்பு எதுவும் நடக்காமல் பார்த்துக் கொண்டார்கள். மேலும் ஜி.பி முத்து கோவில் இடத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளார் என்று ஊர் பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள். இது தொடர்பான வீடியோக்கள் தகவலும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் அனைவருக்கும் ஒற்றை நபராக ஜி.பி முத்து, பதிலடி கொடுத்துக் கொண்டு இருந்தார்.

நியாயம் யார் பக்கம்: இந்நிலையில் ஜி.பி. முத்துவின் வீட்டிற்கு காவல்துறை தரப்பில் பாதுகாப்பிற்காக காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த தகவலை அறிந்த இணையவாசிகள், ஒரு இடம் என்றால் அந்த இடத்திற்கு தடம் என்று இருக்கும் தானே, அப்படி இருக்கும்போது ஜி.பி. முத்து தரப்பில் நியாயம் உள்ளது போல் தெரிகிறது என்று கூறி வருகிறார்கள். அதேபோல், சிலர், ஜி.பி. முத்து தனது பப்ளிசிட்டிக்காக இப்படி செய்து வருகிறார் என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X