விஜய் பற்றி பேச இங்கு யாருக்குமே தகுதி இல்லை.. பணத்திற்கு புகழுக்கு ஆசைப்படாதவர்.. பொதுமக்கள் கருத்து!
சென்னை: சென்னை அடுத்த பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக தங்களது விளைநிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் 900 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை, தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் சந்தித்து பேசினார். மேலும், நான் வளர்ச்சிக்கு எதிரானவன் எல்லாம் கிடையாது. விமான நிலையமே வரக்கூடாது என்றெல்லாம் நான் சொல்லவில்லை என்றார்.
விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, மக்களை நேரடியாக சந்திக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில், தற்போது அவர் போராட்டத்தில் குதித்துள்ளதை மக்கள் வரவேற்றுள்ளனர். விஜய் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது உண்மையிலேயே பாராட்டக்கூடிய ஒன்று தான். மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் போராடினால், அது அந்த அளவிற்கு பேசு பொருளாக இருக்காது. இதுவே, தளபதி விஜய் என்பதால், உலகம் முழுவதும் இது ஒரு பேசும் பொருளாகி உள்ளது.

பணம் புகழுக்கு ஆசைப்படாதவர்: விஜய் மற்ற அரசியல் கட்சி தலைவர்களைப் போல, காசுக்கோ, புகழுக்கோ ஆசைப்படுபவர் இல்லை. புகழ், பணம் என அனைத்து உச்சத்தையும் பார்த்துவிட்டு தான் தற்போது அரசியலில் குதித்து இருக்கிறார். சில அறிவு ஜீவிகள் பெயருக்காக விஜய் அரசியலுக்கு வந்தார் என்றெல்லாம் சொல்கிறார்கள். அவர், இதற்கு மேல் புகழையும், பெயரையும் பார்த்து விட்டுத்தான், அரசியலுக்கு வந்து இருக்கிறார். அவர் அரசியலுக்கு வந்த நோக்கமே மக்களின் அடிப்படை பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என்பதுதான்.
யாருக்கும் தகுதி இல்லை: சென்னை விமான நிலையமே காலியாக இருக்கிறது. அதிலேயே விமானம் இல்லை அனைத்தையும் தனியார்மயம் ஆக்கிவிட்டார்கள். விமானத்தையே சரியாக பராமரிக்க முடியாத போது ஏன் விமான நிலையம் எதற்கு என்பதுதான் என்னுடைய கேள்வி. நமக்கு அடிப்படைத் தேவை விவசாயம் தான். பசித்தால் நாம் அனைவரும் சாப்பாட்டை தான் சாப்பிடுவோம். அப்படி இருக்கும்போது விவசாயத்தை அழித்துவிட்டு நாம் என்ன செய்யப் போகிறோம். விவசாயிகளைப் பற்றிய கவலைப்பட அரசியல் கட்சித் தலைவர்களும் தயாராக இல்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் தான் அரசியல் கட்சி தலைவர்களுக்கு விவசாயிகளின் பற்றிய நினைவு வரும் அதனால் விஜய் பற்றி பேச இங்கு யாருக்குமே தகுதி இல்லை என்று பொதுமக்கள் யூடியூப் இணைய தளத்தில் பேட்டி அளித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











