'கடைசில ஜோதிகாவையும் கெட்ட வார்த்தை பேச வச்சிட்டாரே பாலா!'
Recommended Video

நாச்சியார் படத்துல 'தே... பயலுங்க' என்ற வார்த்தையைப் பேசியுள்ளார் நடிகை ஜோதிகா. இது தமிழ் சினிமாவுக்குப் புதிதில்லை என்றாலும், ஜோதிகா போன்ற ஒரு கதாநாயகி இப்படிப் பேசியிருப்பதுதான் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது சமூக வெளியில் பல்வேறு கருத்துக்களைப் பரவ வைத்துள்ளது. ஒரு பெண்ணே இந்த மோசமான வார்த்தைகளை எப்படி உச்சரிக்கலாம் என்று பலரும் கோபக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பாலா படங்களில் கெட்ட வார்த்தைப் பிரயோகம் சகஜம் என்றாலும், ஜோதிகா மாதிரி குடும்பப் பாங்கான பெண்ணின் வாயிலிருந்து இந்த வார்த்தையை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.

ஜோதிகாவே இப்படின்னா...
"ஒரே ஒரு ஒற்றை கெட்ட வார்த்தையில் தெரிகிறது நாச்சியாரின் வீச்சு..! சோதிகாவே இந்த பேச்சு பேசுதே.. ஜிவி.பிரகாஷ் என்ன பேச்சு பேசுவானோ....!?!" என ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

போடி ராசாத்தி!!
"நல்லக் குடும்பத்தில் திருமணம் செய்துகொண்டவர் என்று சொல்லப்படும் ஜோதிகா இப்படியொரு வசனத்தைப் பேச எப்படி ஒத்துக்கொண்டார்? 36 வயதினிலே... மகளிர் மட்டும் என பெண்களின் முன்னேற்றத்திற்கான சினிமாவில் நடித்த ஜோதிகாவா இப்படி? பெண்களை வைத்தே பெண்களை கேவலப்படுத்துவது சில வக்கிர ஆண்களின் டெக்னிக். அதே டெக்னிக்கை பயன்படுத்தி சீப் பாப்புலாரிட்டியை தேடியிருக்கிறார் பாலா. பெண்களின் முன்னேற்றத்திற்காக நயன்தாரா போல நடிக்கக்கூட தேவையில்லை... ஷட்டப் பண்ணிக்கொண்டிருந்தால் போதும் ஜோதிகா. வாடி ராசாத்தி என்று வாய் நிறைய புன்னகையோடு அழைத்த எங்களை போடி ராசாத்தி என்று வயிற்றெரிச்சலோடு சொல்லவைத்துவிட்டீர்களே?" என்று கருத்துத் தெரிவித்துள்ளார் பெண் பத்திரிகையாளர் வினி சர்ப்பனா.

இதுவே ஹீரோ சொல்லிருந்தா
"இதே வார்த்தையை முன்னணி ஹீரோக்கள் யாராவது சொல்லிருந்தா.. 'வாவ்.. செம்ம.. கெத்து.. மாஸ்..'-ன்னு கொண்டாடியிருப்பீங்க. ஒரு ஹீரோயின், அதுவும் போலீஸ் கேரக்டர் பேசினா என்ன தப்பு?" - இப்படி ஒரு குரூப் ஆதரவு காட்டுது.

சூர்யாவுக்கே இல்லாத கோபம்
இந்த டீசரை வெளியிட்டவர் வேறு யாருமல்ல.. ஜோதிகாவின் கணவர் சூர்யாதான். இந்த டீசர் பார்த்து சூர்யாவுக்கே வராத கோபம், சமூக வலைத் தளப் பயனாளர்களுக்கு வந்துவிட்டதே என்பது இன்னும் சிலரது கருத்து.
பரதேசி அடி நினைவிருக்கா
எப்படியோ... பாலா எதிர்ப்பார்த்தது நடந்துவிட்டது. டீசருக்கு தேவையான பப்ளிசிட்டி கிடைத்துவிட்டது. முன்பு பரதேசி படத்துக்கு வேறு மாதிரி பப்ளிசிட்டி கிளப்பினார். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர்களை பிரம்பால் போட்டு சாத்துவது போன்ற வீடியோ வெளியிட்டது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











