பவர் ஸ்டார், சோலார் ஸ்டார் தெரியும்.. அது யாருப்பா பப்ளிக் ஸ்டார்.. புதுசு புதுசா கிளம்புறாங்களே!
’களவாணி 2’ படத்தில் அரசியல் வில்லனாக அதிரடி காட்டியிருக்கிறார் நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்.
சென்னை: 'களவாணி 2' படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார் நடிகர் 'பப்ளிக் ஸ்டார்' துரை சுதாகர்.
விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'களவாணி 2' படம். இந்த படம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்ததுது. சமீபத்தில் தான் இந்த படம் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வந்தன.
விரைவில் படம் ரிலீசாக உள்ள நிலையில், புதிதாக ஒரு தகவல் அதிரடி கிளப்புகிறது. அறிமுகப் படத்திலேயே பவர் ஸ்டார், சோலார் ஸ்டார் ரேஞ்சில், பப்ளிக் ஸ்டார் என்ற பட்டத்தோடு அறிமுகம் ஆகிறார் துரை சுதாகர் என்ற களவாணிப் பட வில்லன் நடிகர்.
'அது யாருப்பா புதுசா பப்ளிக் ஸ்டார்' என விசாரித்தால், இது மக்கள் செல்லமாக கொடுத்த பட்டம் என்கிறார் துரை சுதாகர்.
மேற்கொண்டு இது தொடர்பாக அவருடன் பேசியதில் இருந்து..

தஞ்சாவூர் :
"தஞ்சாவூர் தான் என் சொந்த ஊர். நான் சட்டம் படித்துவிட்டு வழக்கறிஞராக உள்ளேன். மேலும் கட்டுமான தொழில் செய்து வருகிறேன். முதலில் தயாரிப்பாளராக ஆவதற்காக தான் சினிமாவுக்குள் வந்தேன். ஆனால் அது நடக்கவில்லை. பிறகு தான் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது.

தப்பாட்டம்:
தப்பாட்டம் எனும் படத்தில் ஹீரோவாக நடித்தேன். இயக்குனர் எழில் படத்தில் நடித்துள்ளேன். களவாணி 2 படத்தில் முக்கிய வில்லனாக நடித்துள்ளேன். எனது நடிப்பு ஆர்வத்தை பார்த்து சற்குணம் சார் இந்த வாய்ப்பை கொடுத்தார்.

பப்ளிக் ஸ்டார்:
பொதுவாக மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என நினைப்பேன். நிறைய பேருக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளேன். அதனால் தஞ்சாவூரில் என்னை பப்ளிக் ஸ்டார் என செல்லமாக அழைப்பார்கள். அதுவே சினிமாவுக்கு வந்த பிறகு பிரபலமாகிவிட்டது.

ஆசை:
அதற்காக பவர் ஸ்டார், சோலார் ஸ்டார் மாதிரி காமெடியனாக ஆகாமல், குணச்சித்திர நடிகராக வேண்டும் என்பது தான் எனது ஆசை. அதற்குத் தகுந்த மாதிரி படங்களாகத் தேர்வு செய்து வருகிறேன்", என்கிறார் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்.


Click it and Unblock the Notifications