Don't Miss!
- News
போலி செய்தி பரப்பினால்.. அது யாராக இருந்தாலும் நடவடிக்கை நிச்சயம்.. மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரப்போகுது…
- Sports
தல... சின்ன தல... ஒவ்வொருத்தரா பெவிலியனுக்கு அனுப்பிய ராஜஸ்தான் பௌலர்... மிகச்சிறப்பு!
- Automobiles
ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரிய மனசுங்க!! மீட்டியோர் 350 பைக்கில் உத்தரகாண்ட் செல்லும் பெங்களூர் பெண்!
- Finance
இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
" புத்தம் புது காலை" படத்தில் சாதனா இப்படித்தான் இருப்பா.. ஆண்ட்ரியா எக்ஸ்க்ளூசிவ் போட்டோ!
சென்னை : பிரபலமான ஐந்து தமிழ் இயக்குனர்கள் இயக்கி இருக்கும் புத்தம் புது காலை என்ற அந்தோலஜி திரைப்படம் வரும் அக்டோபர் 16ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.
திரையரங்குகள் முழுவதும் மூடப்பட்டுள்ளதால் திரையுலகினர் இப்பொழுது அந்தோலஜி திரைப்படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் தமிழிலும் பல்வேறு அந்தோலஜி திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கார்த்திக் சுப்புராஜ், ராஜீவ்மேனன், சுஹாசினி மணிரத்னம், கௌதம் மேனன், சுதா கொங்கரா என 5 முன்னணி இயக்குனர்கள் இணைந்து ஐந்து சிறந்த கதைகளை இயக்கியிருக்கும் இந்த "புத்தம் புது காலை" திரைப்படத்தில் "சாதனா" கதாப்பாத்திரம் இப்படித்தான் இருக்குமென ஆண்ட்ரியா எக்ஸ்க்ளூசிவ் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
போடுற புரமோல வர சீனே காட்ட மாட்டுறாங்க.. விஜய் டிவி மீது கடுப்பான நெட்டிசன்ஸ்.. பறக்கும் மீம்கள்!

பாடகியாக ஆரம்பித்து
தரமணி, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களில் சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி வரும் நடிகை ஆண்ட்ரியா பாடகியாக தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்து இப்பொழுது நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதே பாணியில்
சென்ற ஆண்டு இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சில்லு கருப்பட்டி திரைப்படம் அந்தோலஜி திரைப்படமாக உருவாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இப்பொழுது அதே பாணியில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வர ஆரம்பித்துள்ளன.

ஓடிடியிலும் வெளியிட
கொரானா காரணமாக கடந்த சில மாதங்களாகவே திரையரங்குகள் முற்றிலும் மூடப்பட்டு உள்ளதால் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் அனைத்தையும் திரையரங்கிலும் வெளியிட முடியாமல் ஓடிடியிலும் வெளியிட முடியாமல் படக்குழு விழிபிதுங்கி போயுள்ளது.

5 கதைகளை இயக்கி
இந்நிலையில் தமிழில் முன்னணி இயக்குனர்களாக வலம் வரும் கௌதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ்மேனன், சுஹாசினி மணிரத்னம், கார்த்திக் சுப்புராஜ் என 5 இயக்குனர்கள் ஒன்றிணைந்து ஐந்து வேறு வேறு கதைகளை இயக்கி அந்தோலஜி திரைப்படமாக உருவாக்கியுள்ளனர்.

படத்தின் டிரைலர்
ஜெயராம், காளிதாஸ், கல்யாணி பிரியதர்ஷன், ஸ்ருதிஹாசன், ஆண்ட்ரியா, ரிது வர்மா, எம்எஸ் பாஸ்கர், அனுஹாசன், சுஹாசினி, பாபி சிம்ஹா போன்ற பிரபலமான நடிகர்களின் நடிப்பில் இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது.

புத்தம் புது காலை
இதில் ராஜீவ் மேனன் இயக்கிய பாகத்தில் ஆண்ட்ரியா "சாதனா" என்ற துடிப்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்க இப்பொழுது சாதனா "புத்தம் புது காலை" திரைப்படத்தில் இப்படித்தான் இருப்பார் என ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட எக்ஸ்க்ளூசிவ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதற்கு "பீயிங் சாதனா" என தலைப்பிட்டுள்ளதை பார்த்த அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இந்த படத்தின் ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் 16ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.