புது வெள்ளை மழை கவர் சாங்… நக்ஷா சரணை பாராட்டிய வைரமுத்து !
சென்னை: சென்னையை சேர்ந்தவர் நக்ஷா சரண். பாடல்கள் மீது தீராத ஆர்வம் கொண்டவர் ஆவார்.
சில வருடங்களாக ரசிகர்கள் மத்தியில் பழைய பாடல்களின் கவர் வெர்ஷன் யூ டியூபில் ட்ரெண்ட்டாகி வருகிறது.
நக்ஷா சரண் பாடி நடித்துள்ள கவர் சாங் தற்போது யூ டியூபில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ஆஸ்கர் நாயகன்
பல வருடங்களுக்கு முன்பு அரவிந்த்சாமி, மதுபாலா நடிப்பில் இன்றைய ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வெளிவந்த முதல் திரைப்படமான ரோஜா படத்தில் இடம் பெற்ற "புது வெள்ளை மழை" எனும் பாடல் ரொம்பவே ஈர்த்துவிட்டது.

கவர் சாங்
இந்த நூற்றாண்டின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று என சிலாகிக்கும் நக்ஷா சரண், தற்போது இந்த பாடலுக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் புதிய வடிவிலான கவர் சாங் அமைத்து தயாரித்து வெளியிட்டுள்ளார்.

5லட்சம் பார்வையாளர்கள்
தனது வைர வரிகளால் ரசிகர்களை கட்டிப்போட்ட பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து யூ டியூபில் ஐந்து லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கும் இந்த கவர் பாடலை பார்த்துவிட்டு, நக்ஷா சரணை பாராட்டினார்.

ரசிகர்கள் வரவேற்பு
இந்த பாடலை யூ டியூபில் ரசிகர்கள் பலரும் பார்த்து தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். நக்ஷா சரணின் ஈர்க்கும் குறளையும் ரசிகர்கள் யூ டியூப் கமெண்ட்ஸில் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











