புதுப்பேட்டை.. ஆயிரத்தில் ஒருவன் ரீ ரிலீஸ்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சென்னை : தமிழகத்தில் சில நாட்களாக திரையரங்குகள் இயங்க தொடங்கியுள்ளன.

விதிகளுக்கு உட்பட்டு பெருவாரியான ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் இயங்கி வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் செல்வராகவனின் இரண்டு படங்கள்
புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ரீ ரிலீஸாக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

ஆயிரத்தில் ஒருவன்

ஆயிரத்தில் ஒருவன்

புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய இரண்டு படங்களும் தமிழ்சினிமா ரசிகர்கள் கொண்டாட மறந்த படைப்பு. அதனை திரையரங்குகளில் தற்போது கொண்டாட வாய்ப்பு கிடைத்துள்ளதால் ரசிகர்கள் கொண்டாடும் முனைப்பில் மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கி காத்துள்ளனர்.

தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி

தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி

புதுப்பேட்டை திரைப்படம் வெளியான போது கிடைத்த பாராட்டுகளை விட சமீப காலத்தில் பெரிதும் பாராட்டப்பட்டது. தனுஷின் கொக்கி குமாரு கதாபாத்திரத்தை நீண்ட வருடங்களுக்கு பிறகு திரையங்கில் கொண்டாட வாய்ப்பு கிடைத்ததை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்களுக்கு விருந்து

ரசிகர்களுக்கு விருந்து

ஆயிரத்தில் ஒருவன் வெளியான போது பெரிய தோல்வியை சந்தித்தது. அந்த சோழர்களின் காவியத்தின் அருமை பின்னர் ரசிகர்களுக்கு புரிந்து ஆஹா, ஓஹோ என பாராட்டினர். அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் மீண்டும் பெரிய திரையில் வெளிவருவது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

60+ திரையரங்குகளில்

60+ திரையரங்குகளில்

புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என இயக்குனர் செல்வராகவனின் இரு பெரிய படைப்புகளும் புத்தாண்டு ஸ்பெஷலாக தமிழ்நாட்டில் சென்னை, மதுரை என 60க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்டாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X