விஜய்க்கு தாராள மனசு.. உதவியால் சந்தோஷப்பட்ட முதல்வர்.. வீடியோ வெளியிட்டு பெருமிதம்!

சென்னை: கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் விஜய் நிதி வழங்கியதற்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நன்றி கூறியிருக்கிறார்.

Recommended Video

விஜய்க்கு தாராள மனசு.. உதவியால் சந்தோஷப்பட்ட புதுச்சேரி முதல்வர் - வீடியோ

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியிருக்கிறது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

இந்நிலையில் வருவாய் இன்றி தவிக்கும் மக்களுக்கும் அரசுக்கும் உதவும் வகையில் நடிகர் நடிகைகள் நன்கொடை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் நேற்று 1.30 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கினார்.

 விஜய் நிதியுதவி

விஜய் நிதியுதவி

அதன்படி முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும் பிரதமர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாயும் அறிவித்துள்ளார். இதேபோல் ஃபெஃப்சி அமைப்புக்கும் 25 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளார் விஜய். அதோடு கேரளாவுக்கு 10 லட்சம் ரூபாயும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு தலா 5 லட்சம் ரூபாயும் நிவாரண தொகையாக அறிவித்துள்ளார் நடிகர் விஜய்.

 கவர் செய்த விஜய்

கவர் செய்த விஜய்

தமிழகம் மட்டுமின்றி தென் மாநிலங்களையும் ஒரே அறிவிப்பில் கவர் செய்தார் நடிகர் விஜய். ஏற்கனவே தனது ரசிகர்கள் மூலம் ஏழை மக்களுக்கு உதவி செய்து வரும் விஜய், நிதியுதவி வழங்கியதை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். சமுக வலை தளங்களிலும் ட்ரென்ட் செய்தனர்.

 நாராயணசாமி வீடியோ

நாராயணசாமி வீடியோ

இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்க்கு நன்றி கூறி டிவிட்டியிருக்கிறார். மேலும் இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் நாராயணசாமி. அதில் ஏராளமான படங்கள் புதுச்சேரியில் ஷுட் செய்யப்படுகிறது.

 விஜய்க்கு நன்றி

விஜய்க்கு நன்றி

அந்த வகையில் நடிகர் நடிகைகள் புதுச்சேரிக்கு உதவ கடமை பட்டுள்ளார்கள். நடிகர் விஜய் கொரோனா தடுப்பு பணிக்காக 5 லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறார். அவரது தாராள மனசை நான் பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன்.. அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவரை போலவே நடிகர் நடிககைள் உதவ முன் வரவேண்டும்.. இவ்வாறு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X