பீஸ்ட் படம் ரிலீஸ் எதிரொலி... புதுச்சேரியில் கட்அவுட்... முதல்வருடன் விஜய்!
புதுச்சேரி : நடிகர் விஜய் நடிப்பில் அடுத்த வாரம் ரிலீசாக உள்ள படம் பீஸ்ட். இந்தப் படம் அதிகமாக வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் புதுச்சேரியில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

விஜய்யின் பீஸ்ட்
நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இந்தப் படத்தில் நடிகர் விஜய் ரா ஏஜெண்டாக வீரராகவன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். படத்தில் கடத்தல் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெயிலர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பான ட்ரெயிலர்
இந்த ட்ரெயிலரில் தீவிரவாதிகள் பிணயக் கைதிகளாக வைத்துள்ள பொதுமக்களை நடிகர் விஜய் காப்பாற்றுவதாக கதைக்களம் காணப்படுகிறது. படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. இதனிடையே இன்று மாலை படத்தின் 3வது பாடல் வெளியாக உள்ளது.

வெறித்தனமான காத்திருப்பு
ரசிகர்கள் இந்தப் பாடலுக்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர். படம் ரிலீசாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் ட்ரெயிலரும் வெளியிடப்பட்டு படத்திற்கான சூப்பர் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் இந்தப் படத்திற்காக வெயிட்டிங்.

பீஸ்ட் திருவிழா
இந்நிலையில் பீஸ்ட் படத்தை திருவிழாவாக்கும்வகையில் ரசிகர்கள் பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர். திருவிழாவிற்கு கடந்த வாரத்தில் பந்தக்கால் நட்ட நிகழ்வும் நடைபெற்றது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் படம் ரிலீசாக உள்ள நிலையில் வட இந்தியாவிலும் படத்திற்காக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

புதுச்சேரி முதல்வருடன் விஜய்
இந்நிலையில் புதுச்சேரியிலும் ஏராளமான இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி -விஜய் சமீபத்தில் சந்தித்த புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுட்ளளது. சமீபத்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவரது பனையூர் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் உற்சாகம்
அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளரும் புதுச்சேரி மாநில விஜய் மக்கள் இயக்கத் தலைவருமான புஸ்சி ஆனந்த் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை அடிக்கடி அவரது அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் பேனர்களில் ரங்கசாமி மற்றும் விஜய் இடம்பெற்றுள்ளது ரசிகர்களை உற்சாகம் கொள்ள செய்துள்ளது.

புதுச்சேரியில் ஏராளமான பேனர்கள்
தமிழ் புத்தாண்டு மற்றும் கோடைக் கொண்டாட்டமாக வரும் 13ம் தேதி பீஸ்ட் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி புதுச்சேரி முழுவதும் விஜய் ரசிகர்கள் கட்அவுட் மற்றும் பேனர்களை வைத்துள்ளனர். இவற்றில்தான் ரங்கசாமி -விஜய் சந்திப்பு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications











