பக்கிரி படம் பெரிய அளவில் வெற்றி பெறவேண்டும்.. நடுக்கடலில் பேனர் வைத்த தனுஷ் ரசிகர்கள்!
புதுச்சேரி: நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள பக்கிரி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி புதுச்சேரி தனுஷ் ரசிகர்கள் நடுக்கடலில் பேனர் வைத்துள்ளனர்.
நடிகர் தனுஷ் நடிப்பில் இன்று திரைக்கு வந்துள்ளது ஹாலிவுட் படத்தின் தமிழ் ரீமெக்கான பக்கிரி படம். இந்தப்படத்தை கேன் ஸ்காட் இயக்கியுள்ளார்.

படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். எரின் மொரியாட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். நிக்கோலஸ், அமித் திரிவேதி ஆகியோர் இசையமைத்துள்ளனர்.
இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள பக்கிரி படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக வலைதளங்களிலும் பக்கிரி படம் குறித்து நல்ல வகையிலேயே விமர்சனங்கள் வந்துள்ளன.

இந்நிலையில் பக்கிரி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி புதுச்சேரி காந்தி சிலை பின்புறம் உள்ள நடுக்கடலில் அவரது ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர். கரையில் இருந்து படகு மூலம் சென்ற ரசிகர்கள் அங்கு பக்கிரி படத்தின் பேனரை வைத்துள்ளனர்.
அது மட்டுமின்றி அந்த பேனருக்கு நடுக்கடலில் பாலபிஷேகமும் செய்துள்ளனர். எப்போதும் புதுச்சேரியில் திரைப் பிரபலங்களின் ரசிகர்கள் இதுபோன்று வித்தியாசமான முறையில் செய்து வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











