திரௌபதி படத்தை வீட்டு வேலை செய்யும் பெண்களுடன் சேர்ந்து பார்த்து ரசித்த புதுச்சேரி கவர்னர்!
சென்னை: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பெண்மையை கொண்டாடும் விதமாக வீட்டுவேலை செய்யும் பெண்களுடன் சென்று 'திரெளபதி' படத்தை கண்டு ரசித்துள்ளார்.
Recommended Video
வண்ணாரப் பேட்டை படத்தின் இயக்குநர் மோகன் ஜி இயக்கியிருக்கும் படம் திரௌபதி. இந்தப் படத்தில் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக ஷீலா நடித்துள்ளார். திரௌபதி படத்திற்கு ஜுபின் இசையமைத்துள்ளார்.

நாடகக் காதல்
இந்தப் படம் கடந்த மாதம் 28 ஆம் தேதி ரிலீஸானது. கிரவுட் ஃபன்டிங் முறையில் படம் தயாரிக்கப்பட்டது. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு இருந்தே பல சர்ச்சைகள் எழுந்தன. ஆனாலும் படம் வெளியானதில் இருந்து பெரும் ஆதரவுடன் வரவேற்புடனும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. நாடகக் காதலை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கொண்டாடும் மக்கள்
இது ஒரு உண்மைச் சம்பவம் என்று அதன் இயக்குநர் மோகன் ஜி ஏற்கெனவே கூறியிருக்கிறார். இதுவரை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீதான அடக்குமுறையை சொல்லும் வகையில் மட்டுமே படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நாடகக்காதலை முதன் முறையாக திரௌபதி படம் சொல்லியிருப்பதால் பல்வேறு சமூகத்தினரும் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இன்னும் ஹவுஸ்ஃபுல்
திரௌபதி படம் 50 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. ஆனால் ரிலீஸான முதல் ஒரு வாரத்தில் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்துள்ளது. படத்திற்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அரசியல் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மக்கள் குடும்பம் குடும்பமாக சென்ற பார்ப்பதால் படம் ஓடும் சில திரையரங்குகள் இன்னும் ஹவுஸ் ஃபுல்லாகவே உள்ளது.

திரௌபதி படம்
இந்நிலையில், 'திரெளபதி' படத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அவரது அலுவலகத்தை தூய்மை செய்யும் பணியாளர்களுடன் சென்று திரையரங்கில் கண்டு ரசித்துள்ளார். பெண்மையை கொண்டாடும் விதமாக இந்தப் படத்தை கண்டதாகவும் அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் பெண்களுடன் சென்று படம் பார்த்த போட்டோவையும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











