twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'கேரள அரசு உறுதி செய்தால் அமலாபால் மீது நடவடிக்கை' - அமைச்சர் திட்டவட்டம்!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    'கேரள அரசு உறுதி செய்தால் அமலாபாலுக்கு தண்டனை-அமைச்சர் திட்டவட்டம்- வீடியோ

    புதுச்சேரி : நடிகை அமலாபால் கார் பதிவு செய்ததில் சட்ட விதிகளை மீறவில்லை என புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

    நடிகை அமலா பால் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய கார் பதிவு செய்ததில் அவர் போலி முகவரியைக் கொடுத்து சட்டத்தை மீறி வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

    20 லட்சம் வரி ஏய்ப்பு செய்துள்ள அமலா பாலிடம் விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு புதுச்சேரி போக்குவரத்துத் துறைச் செயலருக்கு கவர்னர் கிரண் பேடி உத்தரவிட்டார்.

     பாண்டிச்சேரியில் வரி குறைவு

    பாண்டிச்சேரியில் வரி குறைவு

    அமலாபால், கேரளாவில் வாகனத்தைப் பதிவு செய்யாமல் பாண்டிச்சேரியில் வரி குறைவு என்பதற்காக போலியான முகவரியைக் கொடுத்து பதிவு செய்ததால் கேரள மாநில அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரித் தொகை கிடைக்காமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. நான் சட்டத்தை மீறி எதையும் செய்யவில்லை என அமலா பால் விளக்கம் அளித்தார்.

    நடிகர்களும்

    நடிகர்களும்

    நடிகை அமலா பாலை தொடர்ந்து மலையாள நடிகர் பகத் பாசிலும் தவறான முகவரி கொடுத்து சட்டத்தை மீறியுள்ளார் என்று செய்திகள் வெளியானது. அவரைத் தொடர்ந்து நடிகர் சுரேஷ் கோபி மீதும் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

    அமைச்சர் விளக்கம்

    அமைச்சர் விளக்கம்

    இந்நிலையில், 'நடிகை அமலாபால் சட்டவிதிகளுக்கு உட்பட்டே காரை பதிவு செய்துள்ளார். அமலாபால் தனது பென்ஸ் காரை புதுச்சேரியில் பதிவு செய்ததில் சட்ட விதிமுறை மீறம் இல்லை' என புதுச்சேரி மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

    கேரள அரசு உறுதிப்படுத்தட்டும்

    கேரள அரசு உறுதிப்படுத்தட்டும்

    'போலி முகவரியில் கார் பதிவு செய்யப்பட்டதை கேரள அரசு உறுதிப்படுத்தினால் அமலா பால் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார். அவர் போலி முகவரி சான்றிதழ் தரவில்லையென ஏற்கெனவே கூறியிருந்தார் ஷாஜகான்.

    யாராக இருந்தாலும்

    யாராக இருந்தாலும்

    அவர் மேலும், 'அமலாபால் தவிர வேறு யாராக இருந்தாலும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வாகனம் பதிவு செய்யப்படும். வேறு மாநிலலத்தைச் சேர்ந்தவர்களும் பதிவு செய்துகொள்ள சட்டத்தில் இடம் உள்ளது' எனவும் தெரிவித்துள்ளார்.

    English summary
    Puducherry Union Minister of Transport, Shajahan said, "If the Kerala government confirms that the car was registered in the fake address, then Amala Paul will be legally enforced."
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X