6 மணி நேரத்தில் ரூ.25 லட்சம் சம்பாதித்த புகழ்...அப்படி என்ன தான் செஞ்சாரு

சென்னை : கோலிவுட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் காமெடியனாக இருந்து வருகிறார் புகழ். விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி இரண்டு சீசன்களிலும் கோமாளியாக நடித்து பலரின் மனங்களை கவர்ந்தவர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பிரபலமான புகழுக்கு சினிமாவில் நிறைய பட வாய்ப்புக்கள் கிடைத்து வருகிறது. தற்போது பீஸ்ட், வலிமை, ஏவி 33, விஎஸ்பி 46, சபாபதி, என்ன சொல்ல போகிறாய் உள்ளிட்ட அரை டஜன் படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார்.

Pugazh earns 25 lakhs with in 6 hours in a single comedy show

இன்ஸ்டாகிராமில் புகழை பின் தொடர்வோர்களின் எண்ணிக்கை 3 மில்லியனை கடந்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது படங்களில் நடிப்பதுடன், காமெடி ஷோவிலும் பங்கேற்று வருகிறார்.

ஒரு ஷோவின் மூலம் புகழ் 25 லட்சம் பெற்றுள்ளாராம். அதுவும் வெறும் 6 மணி நேரத்தில். மறைந்த நடிகர் விவேக் மற்றும் மிர்ச்சி சிவா தொகுத்து வழங்கிய LOL எங்க சிரிங்க பாப்போம் என்ற காமெடி ஷோ அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பவர் ஸ்டார் சீனிவாசன், ஹார்த்தி, பிரேம்ஜி அமரன், அபிஷேக் குமார், பாகி, விஜே விக்னேஷ்காந்த், சதீஷ், மாயா, புகழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் காமெடியன்கள் சிரிக்கக் கூடாது. மற்றவர்கள் தான் சிரிக்க வேண்டும். அப்படி காமெடியன்கள் சிரித்தால் அவர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

முதல் போட்டியாளராக பவர்ஸ்டார் சீனிவாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். சதீஷ் தான் வெற்றி பெற்றார். குக் வித் கோமாளி, அபிஷேக் குமார் ஆகியோர் வெற்றி பெற்று, டைட்டில் வென்றுள்ளனர். இவர்கள் 6 மணி நேரம் சிரிக்காமல் இந்த காமெடி ஷோவில் பங்கேற்றுள்ளனர். பரிசுத் தொகை ரூ.25 லட்சத்தையும் வென்றுள்ளனர்.

வெறும் 6 மணி நேரம் என்றாலும் தான் சிரிக்காமல் மற்றவர்களை மட்டும் காமெடியால் சிரிக்க வைத்துள்ளார் புகழ். இந்த திறமைக்காக தான் அவருக்கு பரிசுத் தொகை 25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X